ட்ரம்பிற்கு மிகப்பெரிய அடி..வெளியான அதிர்ச்சி தகவல்
போதைப்பொருள் படகு மீதான அமெரிக்காவின் தாக்குதல் தொடர்பில் புதிய அறிக்கை வெளியாகி கேள்விகளை எழுப்பியுள்ளது.
சட்டவிரோத போதைப்பொருட்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தங்கள் நாட்டிற்கு சட்டவிரோத போதைப்பொருட்கள் உள்நுழைவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.
அதன் அடிப்படையில், அமெரிக்காவிற்கு சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்டு வருவதாக படகு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
இதனைக் குறிப்பிட்டு டொனால்ட் ட்ரம்ப், "வெனிசுலாவில் இருந்து வந்த போதைப்பொருள் பயங்கரவாதிகளின்" படகினை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கு செல்லவில்லை
இந்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளான படகு அமெரிக்காவிற்கு செல்லவில்லை என்ற புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
குறித்த படகு, வெனிசுலாவிற்கு கிழக்கே தென் அமெரிக்க நாடான சுரினாமிற்கு செல்லும் ஒரு பாரிய கப்பலை சந்திக்க சென்றாக, இந்த நடவடிக்கையை மேற்பார்வையிட்ட அட்மிரல் ஒருவர் அமைச்சர்களிடம் கூறியுள்ளார்.
அத்துடன் அமெரிக்க படைகள் அதனைத் தாக்கியபோது கப்பல் திரும்பிவிட்டதாகவும், நான்கு முறை படகு தாக்கப்பட்டதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் கூறினார். இது அமெரிக்க பாதுகாப்பு செயலாளரை அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
தாக்குதலை மேற்பார்வையிட்ட பீட் ஹெக்செத், நிகழ்வுகளை தெளிவுபடுத்த நடவடிக்கையின் முழு வீடியோவையும் வெளியிட அழுத்தத்தை எதிர்கொள்கிறார்.
அவர் வீடியோ மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும், ஆனால் அதை வெளியிட உறுதியளிக்கவில்லை என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆனால், கப்பலில் இருந்த 11 பேரையும் கொன்று, படகை மூழ்கடிப்பதே பணியின் நோக்கம் என்பதை அட்மிரல் உறுதிப்படுத்தினார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |