பாகிஸ்தான்- இந்தியா மோதல் நான்கு வாரங்கள் நீடித்தால் எவ்வளவு செலவாகும்?
இந்தியா - பாகிஸ்தான் மோதல் நான்கு வாரங்கள் வரையில் நீடித்தால் இரு நாடுகளுக்கும் பல பில்லியன் டொலர் செலவாகும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதாரச் சுமை
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதல் ஏற்கனவே இரு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க பொருளாதாரச் சுமைகளை ஏற்படுத்தியுள்ளது. இராணுவ நடவடிக்கைகளைப் பொறுத்தமட்டில், மூன்று முதன்மை செலவுகள் தனித்து நிற்கின்றன:
வான்வழித் தாக்குதல்கள், விரிவான ட்ரோன் பயன்பாடுகள் மற்றும் அதிகரித்த போர் தயார்நிலை. இதில் இந்திய விமானப்படை ஒரு நாளைக்கு தோராயமாக 100 நடவடிக்கைகளை ரஃபேல் உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்களால் மேற்கொண்டால் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் சுமார் 80,000 அமெரிக்க டொலர் செலவாகும் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், SCALP, Spice 2000, Hammer உள்ளிட்ட ஏவுகணைகளைப் பயன்படுத்தினால் நாள் ஒன்றிற்கு 1.1 மில்லியன் டொலர் வரையில் செலவாகும். இதே நடவடிக்கைகள் நான்கு வாரங்களுக்கு நீடித்தால், தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களின் மொத்த செலவு தோராயமாக 6 பில்லியன் டொலரை எட்டக்கூடும்.
இந்தியா தரப்பில் Harop, Heron மற்றும் Searcher உள்ளிட்ட ட்ரோன்களை பயன்படுத்துவதுடன், அதற்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளின் ஒரு நாள் செலவு 100 மில்லியன் டொலராக இருக்கலாம் என கணிக்கின்றனர்.
நான்கு வாரங்களுக்கு மட்டும் 3 பில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா நாள் ஒன்றிற்கு 10 BrahMos ஏவுகைணைகளை பயன்படுத்தும் என்றால், அதனுடன் 10 முதல் 20 பிரலே பாலிஸ்டிக் ஏவுகணைகள் என்றால் நான்கு வாரங்களுக்கு 4.5 பில்லியன் டொலர்கள் செலவாகலாம் என மதிப்பிடுகின்றனர்.
நான்கு வாரங்களில்
துருப்புக்களை திரட்டுதல் மற்றும் எரிபொருள் நுகர்வு ஒரு நாளைக்கு 40 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. S-400, ஆகாஷ் மற்றும் BARAK-8 உள்ளிட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பராமரிப்பதற்கு தினமும் 20 மில்லியன் டொலர் செலவாகும் என்றே கூறப்படுகிறது.
கிழக்கு மற்றும் மேற்கு கடற்படை தயார்நிலைக்கு ஒரு நாளைக்கு கூடுதலாக 50 மில்லியன் டொலர் செலவாகும். பாகிஸ்தான் தரப்பில் வான்வழி தாக்குதல் மற்றும் ரோந்து நடவடிக்கைகளுக்கு நாள் ஒன்றிற்கு 25 மில்லியன் டொலர் செலவாகும் என்றும், நான்கு வாரங்களுக்கு சுமார் 1 பில்லியன் டொலர் செலவாகலாம் என்றும் கூறுகின்றனர்.
துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. அத்துடன் ஏவுகணைகள் பயன்பாடு என கூடுதலாக 450 மில்லியன் டொலர் செலவாகலாம் என மதிப்பிடுகின்றனர்.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி
எல்லையில் எச்சரிக்கை நிலை, துருப்புகளின் நகர்வு, எரிபொருள் நுகர்வு என நான்கு வாரங்களுக்கு 450 மில்லியன் டொலர் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவ செலவு மட்டுமின்றி, வருவாய் இழப்பு, பங்குச்சந்தை சரிவு உட்பட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டால், இரு நாடுகளுக்கும் மொத்தமாக நான்கு வாரங்களில் 500 பில்லியன் டொலர் இழப்பு ஏற்படும் என்றே மதிப்பிடுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |