250 நாய்களை கட்டிடத்தின் உச்சிக்குத் தூக்கிச் சென்று வீசியெறிந்து கொன்ற குரங்குகள்... வனத்துறை எடுத்துள்ள நடவடிக்கை
இந்தியாவில், தன் குட்டி ஒன்றை நாய்கள் கொன்றதற்கு பழிக்குப் பழி வாங்குவதற்காக, 250 நாய்களை கட்டிடத்தின் உச்சிக்குத் தூக்கிச் சென்று வீசியெறிந்து குரங்குகள் கொன்றதாக ஒரு செய்தி வெளியாகி திகிலை ஏற்படுத்தியது.
மஹாராஷ்ட்ராவிலுள்ள Majalgaon என்ற கிராமத்தில், நாய்கள் சில சேர்ந்து ஒரு குரங்குக்குட்டியைக் கொன்றுவிட்டதாகவும், அதைத் தொடர்ந்து, பழிக்குப்பழி வாங்குவதற்காக குரங்குகள் சேர்ந்து நாய்களைத் தாக்கி, அவற்றைத் தூக்கிச் சென்று உயரமான கட்டிடங்கள் மற்றும் மரங்கள் மீதிருந்து கீழே வீசிக் கொன்றதாகவும் அக்கிராமத்தினர் தெரிவித்தார்கள்.
இதுவரை, சுமார் 250 நாய்கள் வரை குரங்குகளால் இப்படி வீசி எறியப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தார்கள்.
அங்கு இப்போது ஒரு நாய் கூட இல்லை என்று கூறிய கிராமவாசிகள், நாய்கள் இல்லாததால், குரங்குகள் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளை குரங்குகள் துரத்துவதாக தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில், தற்போது அந்த குரங்குகளை வனத்துறையினர் பொறி வைத்துப் பிடித்துள்ளார்கள்.
அவற்றை பிரித்து, வனத்தின் வெவ்வேறு பகுதிகளில் கொண்டு விட முடிவு செய்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், கூண்டில் அடைக்கப்பட்ட குரங்குகள் மனிதர்களைப் பார்த்து பயங்கரமாக பல்லைக் காட்டி உறுமும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.