இளம்பெண்ணை பணியமர்த்தியதால் பிரதமர் ராஜினாமா
பெரு நாட்டில் முறைகேடாக இளம்பெண்ணை பணியமர்த்தியதால் அந்நாட்டின் பிரதமர் பதவி விலகுவதாக அறிவித்தார்.
ஆல்பர்டோ ஒடரோலா
தென் அமெரிக்க நாட்டின் பிரதமர் ஆல்பர்டோ ஒடரோலா (Alberto Otarola) மீது பணியமர்த்தியது தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்தது.
அவர் பொதுத்துறையில் இளம்பெண் ஒருவரை முறைகேடாக பணியில் சேர்த்ததாக ஓடியோ ஒன்று வெளியானது.
இதனைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் ஆல்பர்டோ அறிவித்தார்.
பதவி விலகல்
இதுதொடர்பான அறிவிப்பை செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, 'குடியரசுத் தலைவர் டினா போலுவார்ட்டுடனான (Dina Boluarte) உரையாடலுக்குப் பிறகு, எனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். அரசியல் எதிரிகளின் அடிப்படை என்னை அச்சுறுத்தவில்லை' என்றார்.
அத்துடன், அமைச்சரவையை மீண்டும் மாற்றி அமைப்பதற்கு ஜனாதிபதிக்கு அமைதியை வழங்குவது மற்றும் அவர் செய்துகொண்டிருந்த பணியை தொடர அனுமதிப்பது ஆகிய இரண்டு நோக்கங்களுக்காக பதவி விலகுவதாக ஆல்பர்டோ குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |