ஹரியால் கொடுமைக்கார சித்தி என அழைக்கப்பட்ட ராணி கமீலா: வியப்பூட்டும் ஒரு தகவல்
Queen Camilla will be key figure in Harry and Meghan's return to royal family: ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்துக்குத் திரும்புவதில் ராணி கமீலா ஒரு முக்கியப் பங்கு வகிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய இளவரசரான ஹரி ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியபோது, தன் தந்தையின் இரண்டாவது மனைவியான ராணி கமீலாவை கொடுமைக்கார சித்தி என விமர்சித்திருந்தார்.
ஆனால், அந்த ராணி கமீலா தொடர்பில் ஒரு வியப்பூட்டும் செய்தி வெளியாகியுள்ளது.
ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறிய ஹரி
இளவரசர் ஹரி ராஜ குடும்ப மரபை மீறி, விவாகரத்தான அமெரிக்க நடிகையான மேகன் மார்க்கலை திருமணம் செய்தது, மற்றும் மேகனால் ராஜ குடும்பத்தில் சமாளிக்க முடியாமல் போனதால் உருவான பிரச்சினைகள், ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேற வழிவகுத்தன.
பின்னர் ராஜ குடும்பத்தை மட்டுமல்ல, பிரித்தானியாவை விட்டே வெளியேறி மனைவியின் நாடாகிய அமெரிக்காவில் குடியேறினார் ஹரி.

இந்நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் ஹரி தன் குடும்பத்துடன் பிரித்தானியா திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொடுமைக்கார சித்தி என அழைக்கப்பட்ட ராணி கமீலா விடயம் என்னவென்றால், ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறியதுடன் நிற்கவில்லை.
ராஜ குடும்பத்தைப் பற்றி மோசமாக விமர்சித்தனர், தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகள் கொடுத்தனர், அதை உலகமே பார்த்தது.
அது போதாதென்று, ஹரி தன் பங்குக்கு ‘ஸ்பேர்’ என்னும் பெயரில் ஒரு சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
அதில் தன் அண்ணன் வில்லியம், அண்ணி கேட் உட்பட அனைவரையும் மோசமாக விமர்சித்திருந்தார் ஹரி.
குறிப்பாக, தன் தந்தையின் இரண்டாவது மனைவியான கமீலாவைக் குறித்து, கமீலா கொடுமைக்கார சித்தியாக இருப்பார் என்றும், ஆகவே அவரை திருமணம் செய்யவேண்டாம் என தான் தன் தந்தையான மன்னர் சார்லசைக் கெஞ்சியதாகவும் குறிப்பிட்டிருந்தார் ஹரி.
வியப்பூட்டும் ஒரு தகவல்
விடயம் என்னவென்றால், இப்போது ஹரி, மேகன் தம்பதியர் தங்கள் பிள்ளைகளுடன் மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்ப முடிவு செய்துள்ள நிலையில், அவர்களை மீண்டும் ராஜ குடும்பத்துக்கு அறிமுகம் செய்வதில் கமீலா முக்கியப் பங்காற்ற இருப்பதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கமீலா தன் முன்னாள் கணவரான ஆண்ட்ரூ பார்க்கரைப் பிரிந்தாலும், தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் இன்னமும் நெருக்கமான உறவு வைத்துள்ளார்.
ஆக, கமீலா குடும்பம் என்னும் விடயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.
ஆக, மன்னர் சார்லஸ், ஹரியின் பிள்ளைகளான தன் பேரப்பிள்ளைகளுக்காக ஏங்கும் நிலையில், மீண்டும் ஹரியை தங்கள் குடும்பத்துக்குள் அனுமதிக்க மன்னரைத் தூண்டியதே கமீலாவின் அமைதியை ஏற்படுத்தும் வகையிலான தாக்கம்தான் என்கிறார்கள் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த சிலர்.
அதாவது, ஹரி தன்னை கொடுமைக்கார சித்தி என விமர்சித்தாலும், அதை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல், ஹரி மீண்டும் ராஜ குடும்பத்தில் இணைவது தன் கணவரான மன்னர் சார்லசுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமானால், அதை செய்ய அவர் தயாராக உள்ளதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |