பிரித்தானியா வரும் இளவரசர் ஹரி... மன்னருக்கு ஏற்பட்டுள்ள தர்மசங்கடமான நிலை
இளவரசர் ஹரி தான் உருவாக்கிய இன்விக்டஸ் விளையாட்டுப்போட்டிகளுக்காக பிரித்தானியா வர இருக்கிறார்.
இந்நிலையில், விளையாட்டுப்போட்டிகளில் முக்கியப் பங்கேற்க அவர் தனது தந்தையான பிரித்தானிய மன்னர் சார்லசுக்கு அழைப்பு விடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா வரும் இளவரசர் ஹரி...
2027ஆம் ஆண்டுக்கான இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகள், அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் 17ஆம் திகதிவரை, இங்கிலாந்தின் பர்மிங்காமிலுள்ள தேசிய கண்காட்சி மையத்தில் நடைபெற உள்ளன.

Credit : Joshua Sammer/Getty Images
இன்விக்டஸ் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக இளவரசர் ஹரி பிரித்தானியா வர உள்ளதுடன், போட்டி தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் ராஜகுடும்ப உறுப்பினர்களுக்கு அழைப்பும் விடுக்க இருக்கிறார்கள்.
மன்னருக்கு ஏற்பட்டுள்ள தர்மசங்கடமான நிலை
விடயம் என்னவென்றால், அப்படி மன்னர் சார்லசுக்கு இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டி தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அழைப்பு விடுக்கப்படும் நிலையில், அவருக்கு அது தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தன் பேரப்பிள்ளைகளை சந்திக்க ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களை சந்திக்கும் ஒரு வாய்ப்பாகவும், தன் மகனான ஹரிக்காகவும் அவர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடும்.
என்றாலும், நிச்சயம் ஹரியுடன் அவரது மனைவியான மேகனும் பிரித்தானியா வருவார். அவரால்தான் ராஜகுடும்பத்தில் பிரிவே ஏற்பட்டது.
ஆக, மேகனை சந்திக்க மன்னர் விரும்புவாரா. அதைவிட, மன்னரின் மூத்த மகனான இளவரசர் வில்லியம், ஹரி மற்றும் மேகனுடன் தன் தந்தையான மன்னர் சார்லஸ் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை விரும்புவாரா?
மன்னர் தன் மகனை மன்னிக்கத் தயாராக இருந்தாலும், தன்னையும் தன் மனைவியான இளவரசி கேட்டையும் குறித்து தனது சுயசரிதைப் புத்தகமான ஸ்பேர் என்னும் புத்தகத்தில் மோசமாக எழுதியதால் கடும் கோபத்திலிருக்கும் வில்லியம், தன் தம்பியான ஹரியுடன் இன்விக்டஸ் நிகழ்ச்சிகளில் தன் தந்தை பங்கேற்பதை விரும்புவாரா என்னும் கேள்வியும் எழுந்துள்ளது.

Credit : CHRIS JACKSON/GETTY IMAGES
எல்லாவற்றிற்கும் மேலாக, மன்னரின் மனைவியான ராணி கமீலா, 2027ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி தன் 80ஆவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார்.
அன்றுதான் இன்விக்டஸ் போட்டிகளில் நிறைவு நாள் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஆக, மன்னர் இன்விக்டஸ் போட்டிகளில் கலந்து கொள்வாரா அல்லது தன் காதல் மனைவியின் 80ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வாரா என்னும் கேள்வியும் எழுந்துள்ளது.
ஆக மொத்தத்தில், இன்விக்டஸ் போட்டிகளில் கலந்துகொள்ள மன்னர் சார்லசுக்கு இளவரசர் ஹரி அழைப்பு விடுக்க இருக்கும் விடயத்தால் மன்னருக்கு தர்மசங்கடமான நிலை உருவாகியுள்ளதை மட்டும் மறுப்பதற்கில்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |