பணத்தேவைக்காக 'பிசாசிடம் மாட்டிக்கொண்ட' ஹரி-மேகன்! பின்வாங்க வழியில்லை.,
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் அரச குடும்பத்தைவிட்டு வெளியேறியபிறகு தங்கள் பணத்தேவைக்காக சம்பாதிக்கும் முயற்சியில் தங்கள் நிதியாளர்களிடம் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
அரச பொறுப்புகளில் இருந்து விலகி அமெரிக்காவில் குடியேறியதையடுத்து, ஹரி-மேகன் தம்பதிக்கு அரசு குடும்பத்திலிருந்து கிடைத்த வருமானம் தடைப்பட்டது.
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலுக்கு பணத்தேவை உள்ளது, இதனால் அவர்களால் நெட்பிலிக்ஸ் உடனான ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கமுடியாது என்று அரச குடும்ப வரலாற்றாசிரியர் Thomas Michael Bower கூறுகிறார்.
பிரித்தானியாவின் ஜிபி நியூஸ் ஊடகத்தில் தொகுப்பாளர் Dan Wootton உடனான நேர்காணலில் பேசிய அரச குடும்பத்தின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் Thomas Michael Bower, இளவரசர் ஹரியும் மேகனும் தங்கள் நெட்பிலிக்ஸ் ஒப்பந்தத்தையும், ஹரியின் நினைவுக்குறிப்பு புத்தகத்தையும் கைவிட வேண்டுமா என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, ஹரியும் மேகனும் இந்த பெரிய நெட்ஃபிக்ஸ் ஒப்பந்தத்தில் தங்கள் நம்பகத்தன்மையையும் கண்ணியத்தையும் விட்டுக் கையெழுத்திட்டார்கள் என்று Wootton கூறினார்.
அதற்கு பதிலளித்த Bower, “அது நம்முடைய பார்வையில் அது சரியாக இருக்கலாம், ஆனால் அது அவர்களுடையது அல்ல. அவர்களுக்குப் பணம் தேவை, வேறு எந்த வருமானமும் கிடைக்காததால், முன்பை விட இப்போது அது அவர்களுக்குத் தேவைப்படுகிறது.
எனவே, அவர்கள் இப்போது பிசாசிடம் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் நெட்ஃபிக்ஸ் உடன் பிணைக்கப்பட்டுள்ளனர், அவர்கள் தங்கள் புத்தகத்துடன் பிணைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் சந்திக்கப்போகும் அனைத்து விமர்சனங்களும் ஒன்றும் இல்லை, ஏனென்றால் அவர்கள் பணம் சம்பாதிக்கப் போகும் ஒரே வழி இதுதான்" என்று கூறினார்.
மேகனும் ஹாரியும் 2020-ல் அரச குடும்பத்தை விட்டு வெளியேறினர். பின்னர் நிதி உதவிக்காக நெட்ஃபிக்ஸ் மற்றும் ஸ்பாட்டிஃபை நிறுவனத்துடன் பல மில்லியன் டாலர் ஒப்பந்தங்களில் தம்பதியினர் கையெழுத்திட்டனர்.