டயானாவின் மரணத்தால் இளவரசர் ஹரிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி: கண்டுபிடித்த நபர் யார் தெரியுமா?
இளவரசி டயானாவின் மரணத்திற்கு பிறகு, இளவரசர் ஹரி மனநல போராட்டங்களை சந்தித்தது தெரிய வந்துள்ளது.
ஹரியின் மனநலம்
பிரித்தானிய இளவரசர் ஊடகங்கள் மற்றும் அரச குடும்பத்தின் கண்காணிப்பின் கீழ் வளர்ந்தவர் ஆவார். அதன் காரணமாகவே அவர் எப்போதும் மனநலம் குறித்து குரல் கொடுத்து ஆரம்பித்தார்.
கலிபோர்னியாவுக்கு இடம்பெயர்ந்ததில் இருந்து இதுதொடர்பில் இன்னும் அதிகமான பணிகளை செய்துள்ளார். இதற்கு சான்றாக, ஹரி கடந்த ஆண்டு நியூயார்க்கில் நடந்த ஒரு மாநாட்டில் 'mental health' என்ற வார்த்தையை, 'mental fitness' என்று மாற்ற வேண்டும் எனக் கூறி அழைப்பு விடுத்தார்.
அத்துடன் "மனநலம் என்பது மேலிருந்து கீழாக, இளையவர் முதல் பெரியவர் வரை நம் ஒவ்வொருவரையும் பாதிக்கும் மிக மிக முக்கியமான பாடம்" என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, தனது குடும்பத்தை அமெரிக்காவிற்கு மாற்றியதன் மூலம், ஹரி தனது சொந்த குழந்தைகளை வித்தியாசமாக வளர்க்க விரும்புவதாக கூறியிருந்தார்.
அப்போது அவர், 'சில நேரங்களில் நீங்கள் முடிவுகளை எடுக்க வேண்டும், உங்கள் குடும்பத்தையும் உங்கள் மன ஆரோக்கியத்தையும் முதன்மைப்படுத்த வேண்டும்' என்றார்.
வெடிக்கும் குணம்
முன்னாள் காதலியான கிரெஸிடா போனஸ், ஹரியின் 'வெடிக்கும் குணத்தை' கண்ட பிறகு, ஒரு மனநல நிபுணரை சந்திக்க ஊக்குவித்துள்ளார்.
இது அரச வாழ்க்கை வரலாற்றாசிரியர் டினா பிரவுனின் 'தி பேலஸ் பேப்பர்ஸ்' மூலம் தெரிய வருகிறது.
மேலும் பிரவுன் அந்த புத்தகத்தில், "கிரெசிடாவுக்கு அவரது மனநலம் குறித்து கடுமையான கவலைகள் ஏற்படத் தொடங்கின.
ஹரியை முதலில் ஒரு சிகிச்சையாளராகப் பார்க்க வற்புறுத்தியவர் அவர்தான் என்பது பரவலாகத் தெரியவில்லை" என எழுதினார்.
ஒரு குடும்ப நண்பர் பிரவுனிடம், 'தனக்கு பிரச்சனைகள் இருப்பதை ஏற்றுக்கொண்டு ஒரு மனோதத்துவ ஆய்வாளரைப் பார்க்க' கிரெசிடா இளவரசரை கட்டாயப்படுத்தியதாக கூறினார்.
டயானாவின் மரணத்தால்
அதன் பின்னர் இளவரசி ஹரி, தாய் டயானாவின் தோழியான ஜூலியா சாமுவேலை நோக்கி உதவிக்காகத் திரும்பினார்.
MI6யில் உள்ள தெரபிஸ்ட்கள் மூலம், ஹரிக்கு நம்ப முடியாத அளவிற்கு விவேகமுள்ள, பொதுவாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றை கொண்டிருப்பதை புரிந்துகொள்ளும் ஒருவரின் தேவை இருப்பது தெரிய வந்தது.
ஹரிக்கு 12 வயதாக இருந்தபோது, டயானாவின் மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியை இறுதியாக சிகிச்சையின் மூலம் கண்டுபிடித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |