இளவரசர் வில்லியமுக்கு காதல் எலும்பு கிடையாது: கேட் மிடில்டனை கண்ணீர் விட வைத்த இளவரசர் ஹரி
இளவரசர் வில்லியமின் திருமண விழாவில் இளவரசர் ஹரி ஆற்றிய உரையால் கண்ணீர் விட்ட ஹரி.
இளவரசர் வில்லியம் மற்றும் கேட்டின் தசாப்த காதல், உத்வேகம் நிறைந்தது என ஹரி பேச்சு.
இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் காதல் பற்றி அவர்களின் திருமண விழாவில் இளவரசர் ஹரி ஆற்றிய உரை, கேட் மிடில்டனை கண்ணீரில் ஆழ்த்தியதாக insider தகவல் தெரிவித்துள்ளது.
இளவரசி கேட் மிடில்டன் தனது காதலரான இளவரசர் வில்லியமின் சகோதரர் இளவரசர் ஹரியுடன் நெருக்கமான உறவை கொண்டு இருந்தார்.
GETTY
ஆகவே இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டனின் திருமண விழாவில் முக்கியமான அனைத்து வேலைகளும் இளவரசர் ஹரிக்கு வழங்கப்பட்டது.
அரச நெறிமுறை மற்றும் பாரம்பரியம் நிறைந்த வரலாற்று விவகாரமான இளவரசர் வில்லியம் மற்றும் கேட்டின் திருமண விழாவில் இளவரசர் ஹரியின் பேச்சு வேடிக்கையாகவும், இனிமையாகவும் இருந்ததுடன், இளவரசி கேட்டை கண்ணீரில் ஆழ்த்தியதாக insider தெரிவித்துள்ளது.
ராயல் எழுத்தாளர் கேட்டி நிக்கோலின், லைப் லாஸ் அண்ட் லவ் என்ற புத்தகத்தில், இளவரசர் வில்லியம் மற்றும் கேட்டின் திருமண விழாவில் நடைபெற்ற முக்கியமான நிகழ்வினை வெளியிட்டுள்ளார்.
GETTY
அதில் அரச திருமண விழாவானது பாசமாகவும், சூடாகவும், வேடிக்கை நிறைந்ததாக இருந்ததுடன், வில்லியமை ஆழமாக தொட்டு விட்டதாக தெரிவித்து இருந்தார்.
அப்போது இளவரசர் ஹரி ஆற்றிய உரையில், கேட்டைச் சந்திப்பதற்கு முன்பு வில்லியமின் உடலில் காதல் எலும்பு இல்லை, ஆனால் வில்லியம் திடீரென்று தொலைபேசியில் கேட்டை கூப்பிடத் தொடங்கிய போது அது தீவிரமானது என்று எனக்குத் தெரியும் என தெரிவித்தார்.
மேலும் மிமிக்ரிக்கு பிரபலமானவரான ஹரி தனது சகோதரனை கேட் “பேபிகின்ஸ்”(Babykins) என்று அழைத்தார், இது விருந்தினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
GETTY
கூடுதல் செய்திகளுக்கு: இன்றிரவு அதற்கு முயற்சிப்பீர்களா? இளவரசர் வில்லியமிடம் துடுக்குத்தனமான கேள்வி கேட்ட பெண்
அத்துடன் இளவரசர் வில்லியம் மற்றும் கேட்டின் தசாப்த காதல் மற்றும் உத்வேகம் குறித்து இளவரசர் ஹரி பேசிய போது கேட் கண்ணீர் விட்டார்.