இன்றிரவு அதற்கு முயற்சிப்பீர்களா? இளவரசர் வில்லியமிடம் துடுக்குத்தனமான கேள்வி கேட்ட பெண்
வடக்கு அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் இளவரசர் வில்லியமிடம் பெண் கேட்க துணிச்சலான கேள்வி.
குழந்தை மிகவும் அழகாக இருப்பதாக தாயிடம் தெரிவித்த வேல்ஸ் இளவரசர் வில்லியம்
வடக்கு அயர்லாந்து சுற்றுப்பயணத்தின் போது வேல்ஸ் இளவரசர் வில்லியமிடம் பெண் ஒருவர் சற்று துடுக்குத்தனமான கேள்வி ஒன்றை கேட்டு சங்கடத்திற்கு உள்ளாக்கினார்.
பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்ற பிறகு, வேல்ஸின் புதிய இளவரசராக வில்லியமும் இளவரசியாக கேட் மிடில்டனும் பட்டம் பெற்றனர்.
மகாராணியின் மறைவு துக்கம் கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில், வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் வியாழனன்று அரசுமுறை சுற்றுப்பயணமாக வடக்கு அயர்லாந்திற்கு சென்று இருந்தனர்.
REUTERS
அங்கு Carrickfergus ஐ தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான Carrick Connect ஐ பார்வையிட்ட போது அங்குள்ள நபர்களுடன் தங்களை இளவரசர் வில்லியம் மற்றும் கேட் இருவரும் அறிமுகப்படுத்தி கொண்டனர்.
அப்போது கையில் இளம் குழந்தை வைத்து இருந்த தாய் ஒருவர், இளவரசி கேட் மிடில்டனிடம், நீங்கள் குழந்தையை பிடிக்க விரும்புகிறீர்களா? என்று கேட்க, கணவரான வேல்ஸ் இளவரசர் வில்லியமின் உற்சாகத்தை பார்த்த இளவரசி கேட், ஆமாம் நான் விரும்புகிறேன் என்று பதிலளித்து குழந்தையை கைகளில் பெற்றுக் கொண்டார்.
இதனை பார்த்த இளவரசர் வில்லியம் புன்னகையையும், நகைச்சுவையையும் இளவரசி கேட்-டை நோக்கி தெரிவித்தார். மேலும் குழந்தை மிகவும் அழகாக இருப்பதாகவும் குழந்தையின் தாயாரிடம் தெரிவித்தார்.
PA
இதற்கிடையில் கூட்டத்தின் அங்கமாக இருந்த பெண்மணி ஒருவர், இன்றிரவு நீங்கள் குழந்தைக்காக முயற்சி செய்யப் போகிறீர்களா? என்று வேல்ஸ் இளவரசர் வில்லியமை பார்த்து சற்று துடுக்குத்தனமான கேள்வி ஒன்றை கேட்டு சங்கடத்திற்கு உள்ளாக்கினார்.
இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அனைவரும் புன்னகை புரியவே, உடனடியாக பதிலளிக்காத இளவரசர் வில்லியம் பிறகு மெல்லிய புன்னகையுடன் “அது எப்படி முடியும்” என பதிலளித்துவிட்டு விலகினார்.
கூடுதல் செய்திகளுக்கு: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்கள் ரத்து? நிதியை சேமிப்பது குறித்து ரஷ்ய அதிகாரி தீவிர ஆலோசனை
PA
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் அவரது வடக்கு அயர்லாந்து பயணத்தில் இது இரண்டாவது முறையாக குழந்தையை தனது கைகளில் பெற்று அரவணைத்தார்.