கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்கள் ரத்து? நிதியை சேமிப்பது குறித்து ரஷ்ய அதிகாரி தீவிர ஆலோசனை
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விழாக்கள் ரத்து.
வீரர்களுக்கான உபகரணங்களை வாங்குவதற்கு பட்ஜெட் பணத்தை சேமிக்க விழாக்கள் ரத்து செய்வது தொடர்பாக அதிகாரிகள் விவாதம்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விழாக்கள் ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளிவந்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட பல மாதங்களாக நடைபெற்று வருகிறது, அத்துடன் இந்த போர் நடவடிக்கையானது அடுத்த ஆண்டு வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உலக நாடுகளின் பொருளாதாரம் பெருமளவு சரிவை சந்தித்து, பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட சிரமப்படும் அளவுக்கு நிலைமை சிக்கலாகி உள்ளது.
St. Petersburg, Kaluga and Nizhny Novgorod local authorities will cancel New Year's events in order to save budget money to buy equipment for the mobilized. pic.twitter.com/CqSW0e3RfP
— NEXTA (@nexta_tv) October 7, 2022
இந்நிலையில் போருக்கு தேவையான ஆயுதங்கள் வாங்குவதற்கு தேவையான நிதியை சேமிப்பதற்காக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்கள் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
ரஷ்ய செய்தி நிறுவனமான GazettaRu படி தலைநகர் மாஸ்கோவில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விழாக்கள் ரத்து செய்யலாமா என்று ரஷ்ய அரசு அதிகாரிகள் விவாதிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
REUTERS
செயின்ட் பீட்டர்ஸ்பர்க், கலுகா மற்றும் நிஷ்னி நோவ்கோரோட் ஆகிய நகரங்களின் உள்ளூர் அதிகாரிகள் அணிதிரட்ட பட்டவர்களுக்கான உபகரணங்களை வாங்குவதற்கு பட்ஜெட் பணத்தை சேமிக்க புத்தாண்டு நிகழ்வுகளை ரத்து செய்யலாம் என தெரியவந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானிய டோரி எம்.பி மீது நடத்தை முறைகேடு புகார்: அமைச்சர் பதவியை பறித்த பிரதமர் லிஸ் ட்ரஸ்
மேலும் சில ரஷ்ய நகரங்கள் விழாக்களை ரத்து செய்வதாக ஏற்கனவே அறிவித்துவிட்டனர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.