ராஜ குடும்பத்துக்கு ஒரு துயர செய்தி... துப்பாக்கியுடன் இறந்துகிடந்த இளம்பெண்
இளவரசர் வில்லியம் ஹரியின் சகோதரி முறைகொண்ட இளம்பெண்ணொருவர் உயிரிழந்த விடயம் ராஜ குடும்பத்தில் சோகத்தை உருவாக்கியுள்ளது.
துப்பாக்கியுடன் இறந்துகிடந்த இளம்பெண்
ஆம், இளவரசி டயானாவின் மாமாவின் பேத்தியான ரோஸி (Rosie Roche, 20), இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 14ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள தன் வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
ரோஸி, இளவரசர் வில்லியம் மற்றும் ஹரிக்கு சகோதரி முறை கொண்டவர்.
உயிரிழந்து கிடந்த ரோஸிக்கு அருகில் துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், அவரது மரணத்தில் வேறு யாருக்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளார்கள்.
ரோஸியின் இறுதிச்சடங்குகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவரும் நிலையில், தனிப்பட்ட முறையில், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் அந்த இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த ஆண்டு இளவரசர்கள் வில்லியம் ஹரியின் சகோதரி முறைகொண்டவரான கேப்ரியல்லாவின் (Lady Gabriella Kingston) கணவரான தாமஸ் (Thomas Kingston, 45) துப்பாக்கியால் சுட்டு தனது உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார்.
இந்நிலையில், தற்போது வெறும் 20 வயதில் ரோஸியும் அதேபோன்றதொரு முடிவை சந்தித்துள்ளதால் ராஜ குடும்பத்தில் சோகம் உருவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |