தந்தையைப் போல மகன்: இளவரசர் வில்லியமின் குறும்பு புகைப்படங்கள்
இளவரசர் வில்லியம், கேட் தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் என்பது அனைவரும் அறிந்த விடயம்தான்.
அவர்களில் மூன்றாவது மகன், குட்டி இளவரசர் லூயிஸ். லூயிஸ் எவ்வளவு குறும்புக்காரர் என்பதும் உலகமறிந்த விடயம்.

கூகுளில், லூயிஸின் குறும்பு தருணங்கள் என தேடும் அளவுக்கு அவர் செய்யும் சேட்டைகள் புகைப்படங்களாக குவிந்துள்ளன.
இந்நிலையில், லூயிஸ் அளவுக்கு இல்லையென்றாலும், அவரைப்போலவே குறும்பு செய்யும் இளவரசர் வில்லியமின் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.

தன் தாயான இளவரசி டயானாவின் கைப்பையை வைத்துக்கொண்டு அவர் செய்யும் சேட்டைகளை அந்தப் புகைப்படங்களில் காணலாம்.
இளவரசர் வில்லியம் மட்டுமல்ல, இளவரசர் ஹரியும் தன் தாயுடன் மிகவும் நெருக்கமானவர்.

இளவரசி டயானாவின் மறைவு குறித்து அவ்வப்போது இருவருமே பகிர்ந்துகொள்வதுண்டு.
அவ்வகையில், நெருக்கமான ஒருவரின் மரணம் தொடர்பான அதிர்ச்சி நீண்ட காலம் நீடிக்காது என பொதுவாக கூறுவதுண்டு, ஆனால், என் தாயின் மரணம் உருவாக்கிய அதிர்ச்சி இன்னமும் எனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார் வில்லியம்.

உங்களால் அதிலிருந்து மீளவே முடியாது என்று கூறியுள்ள வில்லியம், அது உங்கள் வாழ்வில் நிகழ்ந்த நம்பமுடியாத ஒரு பெரிய தருணம். ஆகவே, அது உங்களை விட்டு ஒருபோதும் நீங்காது, நீங்கள் அதை சமாளிக்கக் கற்றுக்கொள்கிறீர்கள், அவ்வளவுதான் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |