இளவரசர் ஹரி அப்படி செய்யாமல் இருந்திருந்தால்…மேகனின் விரலை அலங்கரித்திருக்கும் டயானாவின் மோதிரம்
இளவரசர் ஹரி மட்டும் சகோதரர் வில்லியமுக்கு இளவரசி டயானாவின் நிச்சயதார்த்த மோதிரத்தை விட்டுக் கொடுக்காவிட்டால் அது தற்போது இளவரசி மேகனின் கைகளில் இருந்து இருக்கும் என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இளவரசி டயானாவின் மோதிரம்
உலகில் உள்ள மிக உயர்ந்த ஆபரணங்கள் பெரும்பாலும் பிரித்தானிய அரச குடும்பத்திடமே உள்ளது, அதை அரச குடும்ப வாரிசுகள் பரம்பரை பரம்பரையாக நிர்வகித்தும் அனுபவித்தும் வருகின்றனர்.
அந்த வகையில் இளவரசி டயானா 1997ம் ஆண்டு உயிரிழந்ததை தொடர்ந்து அவரது விலையுயர்ந்த உடமைகளை நிர்வகிக்கும் பொறுப்பு அவரது இரண்டு மகன்களான வில்லியம் மற்றும் ஹரியிடம் வழங்கப்பட்டது.
Princess Diana&Prince Charles-இளவரசி டயானா&இளவரசர் சார்லஸ்(Corbis)
அப்போது இளவரசி டயானாவின் கார்டியர் கடிகாரத்தை (Cartier watch) இளவரசர் வில்லியமும், டயானாவின் நிச்சயதார்த்த மோதிரத்தை இளவரசர் ஹரியும் பெற்றுக் கொண்டனர்.
வில்லியம்-கேட்டின் திருமணம்
இளவரசர் வில்லியமிற்கும் இளவரசி கேட்டிற்கும் இடையிலான நிச்சயதார்த்தம் 2010ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட போது, இளவரசர் ஹரியின் பொறுப்பில் இருந்த உயிரிழந்த வேல்ஸ் இளவரசி டயானாவின் நிச்சயதார்த்த மோதிரம் இளவரசி கேட்டின் கை விரல்களில் இருப்பதை ரசிகர்கள் கவனித்தனர்.
அப்போது இளவரசி டயானாவின் நிச்சயதார்த்த மோதிரத்தை இளவரசர் வில்லியம் தனது மனைவிக்காக கோரி இருப்பார் என யூகிக்கப்பட்டது.
இந்நிலையில் இளவரசி டயானாவின் ஆவணப்படத்தில் அவரது முன்னாள் பட்லர் பால் பர்ரெல் தெரிவித்துள்ள தகவலில், இளவரசர் வில்லியம் அவரது தாயின் நெருக்கமான பொருள் ஒன்றை வைத்திருக்க விரும்பியதாகவும் அதற்காக அவரது சகோதரர் இளவரசர் ஹரி தாய் டயானாவின் நிச்சயதார்த்த மோதிரத்தை விட்டுக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
#OnThisDay in 2010 Clarence House announced the engagement of Prince William and Catherine Middleton ?
— CoutureAndRoyals (@CoutureRoyals) November 16, 2022
A photocall & interview followed at St. James’s Palace, where it was revealed he proposed with Princess Diana’s engagement ring. They are now The Prince and Princess of Wales pic.twitter.com/Qxonw0v5Mh
ஒருவேளை அவ்வாறு தனக்கு சொந்தமான தாயின் உடமையான நிச்சயதார்த்த மோதிரத்தை இளவரசர் ஹரி, இளவரசர் வில்லியமிற்கு விட்டு தரவில்லை என்றால், அந்த மோதிரம் தற்போது இளவரசி மேகன் மார்க்கலின் கை விரல்களில் இருந்து இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அந்த மோதிரம் சுமார் £390,000 மதிப்பீட்டில் 14 வட்ட வைரங்களால் சூழப்பட்ட 12 காரட் ஓவல் சபையர் மற்றும் 18 காரட் வெள்ளை தங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மேகனின் நிச்சயதார்த்த மோதிரம்
2018 ல் இளவரசர் ஹரி-மேகன் திருமணத்திலும் அணிவிக்கப்பட்ட நிச்சயதார்த்த மோதிரம் இளவரசி டயானாவின் தனிப்பட்ட சேகரிப்புடன் தொடர்பு கொண்டது.
Meghan marble-மேகன் மார்க்கல்(Getty)
மேகனின் நிச்சயதார்த்த மோதிரம் டயானாவின் தனிப்பட்ட சேகரிப்பில் இருந்த இரண்டு வைரங்களால் ஆனது மற்றும் போட்ஸ்வானாவில் இருந்து வரும் முக்கிய வைரத்தை மையமாகக் கொண்டது, இது தம்பதியினருக்கு இடையே மிகவும் உணர்ச்சிபூர்வமான உறவுகளைக் கொண்டுள்ளது.