களைகட்டிய யூரோவிஷன் இசைக் கச்சேரி: பியானோ-வுடன் மேடையில் தோன்றிய வேல்ஸ் இளவரசி கேட்
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் பியானோ வாசிக்கும் சிறப்பு குறும் வீடியோ ஒன்றில் தோன்றி, லிவர்பூலில் நடைபெற்ற 67வது யூரோவிஷன் பாடல் போட்டியின் இறுதி விழாவை தொடங்கி வைத்தார்.
யூரோவிஷன் நிகழ்ச்சி
பிரித்தானியாவின் லிவர்பூலில் நகரத்தில் 67வது யூரோவிஷன் பாடல் போட்டியின் இறுதி விழா கோலாகலமாக தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.
6000 பேர் வரை கூடி இருந்த அரங்கத்தில் சுமார் 26 நிகழ்ச்சிகள் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது, மேலும் இந்த யூரோவிஷன் நிகழ்ச்சியை 160 மில்லியன் மக்கள் உலகம் முழுவதும் இருந்து கண்டு களித்தனர்.
SkyNews
அத்துடன் 67வது யூரோவிஷன் நிகழ்ச்சியில் கலுஷ் இசைக்குழு(Kalush Orchestra ), மே முல்லர்(Mae Muller )ஆகியோர் தங்களது நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.
இளவரசி கேட் சிறப்பு தோற்றம்
இதற்கிடையில் பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன், பியானோ வாசிக்கும் சிறப்பு குறும் வீடியோ ஒன்றில் தோன்றி, 67வது யூரோவிஷன் பாடல் போட்டியின் இறுதி விழாவை தொடங்கி வைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
SkyNews
பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவில் பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி மற்றும் வருங்கால ராணி கேட் தனித்த பியானோ இசையை படைத்திருந்தார், இந்த சிறப்பு வீடியோ வின்ட்சர் கோட்டையில் இந்த மாதம் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இளவரசி கேட் வாசித்த இந்த இசை குறிப்புகள் ஜோ பிரைஸ் மற்றும் கோஜோ சாமுவேல் ஆகியோரால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.
மேலும் அந்த வீடியோவில் உக்ரைனை குறிக்கும் வகையில், ஒற்றை தோள்பட்டை கொண்ட ராயல் நீல நிற உடையில் தோன்றி இருந்தார்.
SkyNews