சிறந்த வேல்ஸ் இளவரசியாக இருப்பீர்கள்: பெண்மணியின் கருத்துக்கு கேட் மிடில்டனின் காதல் நிறைந்த பதில்
ஒருநாள் வேல்ஸின் சிறந்த இளவரசியாக இருப்பீர்கள் என பெண்மணி கருத்து.
நான் நல்ல கையில் இருப்பதாக கேட் மிடில்டன் காதல் நிறைந்த பதில்.
வேல்ஸ் இளவரசியாக நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் என கூட்டத்தில் பெண்மணி ஒருவர் தெரிவித்த கருத்துக்கு, கேட் மிடில்டன் காதல் நிறைந்த பதில் ஒன்றை அவருக்கு அளித்து அசத்தியுள்ளார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் நாட்டின் புதிய மன்னராக பொறுப்பேற்று கொண்டார்.
PA
இதனை தொடர்ந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் இருவரும், வேல்ஸின் இளவரசர் மற்றும் இளவரசி ஆகிய புதிய பட்டங்களை பெற்றனர்.
ஆனால் இந்த புதிய பட்டங்களை இருவரும் பெறுவதற்கு முன்பே இளவரசி கேட்-யிடம் இது தொடர்பான வாழ்த்துக்களை தெரிவித்த பெண்மணிக்கு, இளவரசி கேட் மிடில்டன் காதல் நிறைந்த வார்த்தைகளை பதிலாக வழங்கி அசத்தியுள்ளார்.
ராணியின் மறைவிற்கு முன்னதாக ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட குயின்ஸ் பிளாட்டினம் ஜூபிலி விழாவின் வார இறுதியில், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் அவர்களின் இரண்டு மூத்த குழந்தைகளான இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசர் சார்லோட்டுடன் கார்டிஃப் கோட்டைக்கு சென்றனர்.
DAILY mirror
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கிய போது, கூட்டத்தில் இருந்த பெண்மணி இளவரசி கேட்-டை நோக்கி ஒரு நாள் வேல்ஸின் சிறந்த இளவரசியாக இருப்பீர்கள் என தெரிவித்தார்.
உடனடியாக அதற்கு பதிலளித்த இளவரசி கேட், உங்கள் அன்பிற்கு நன்றி, நான் நல்ல கைகளில் இருக்கிறேன் என தெரிவித்து இளவரசர் வில்லியமை நோக்கி சைகை செய்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ஆணுறையை வைத்து மைக்-கை பாதுகாத்த அமெரிக்க பெண் நிருபர்: வைரல் வீடியோ!
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து காட்சிகள் ட்விட்டர் பயனர் ஒருவரால் பகிரப்பட்டு, இது தற்போது மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.