சிரியா சிறையில் வெடித்த கலவரம்: நிலநடுக்கத்துக்கு மத்தியில் தப்பியோடி ஐ.எஸ் கைதிகள்
சிரியாவில் உணரப்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தை தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதிகள் கலகத்தில் ஈடுபட்டதோடு 20க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பியோடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம்
துருக்கியின் கஹ்ராமன்மரஸ் மாகாணத்தின் பசார்சிக் நகரில் திங்கட்கிழமை அதிகாலை 4:17 மணியளவில், 7.8 ரிக்டர் என்ற அளவிலான பயங்கரமான நிலநடுக்கம் 6 மைல் ஆழத்தில் மையம் கொண்டு வெளிப்பட்டது.
இரு நாடுகளின் எல்லையில் இந்த நிலநடுக்கம் வெளிப்பட்டதால், துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகளையும் இந்த நிலநடுக்கம் கடுமையாக உலுக்கியது.
AFP
இந்த பயங்கரமான நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்த பின் அதிர்வுகளால் துருக்கி மற்றும் சிரியாவில் சுமார் 4,300 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் மட்டும் 1,444 மக்கள் சிரியாவில் உயிரிழந்து இருப்பதாகவும், போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிராந்தியங்களில் மட்டும் 733 பேர் உயிரிழந்து இருப்பதோடு, 2,100 பேர் வரை காயமடைந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
twitter
சிறையில் இருந்து தப்பிய கைதிகள்
சிரியாவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சிரியாவின் எல்லைப்புற நகரான Rajo-வில் இருக்கும் இராணுவ காவல் சிறையில் உள்ள கைதிகள் கலகத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 2000 கைதிகல் வரை அடைக்கப்பட்டுள்ள சிறையில் 1,300 கைதுகள் ஐ.எஸ் போராளிகள் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இதில் குர்திஸ் படைகளை சேர்ந்த போராளிகளும் அடைக்கப்பட்டு இருந்தனர்.
சிறை கைதிகள் அடைக்கப்பட்டு இருந்த பகுதிகளிலும் பயங்கரமான நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், சிறையின் சுவர்கள், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் சேதமடைந்தன.
AFP
இந்த சூழ்நிலையில் சிறையில் கைதிகளுக்கு மத்தியில் ஏற்பட்ட கலகத்தை பயன்படுத்தி 20 கைதிகள் வரை சிறையில் இருந்து தப்பியோடி இருப்பதாகவும் அவர்கள் ஐ.எஸ் போராளிகள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகளுக்கான போர் கண்காணிப்பு அமைப்பு, கைதிகள் தப்பிச் சென்றார்களா என்பதை சரிபார்க்க முடியவில்லை, ஆனால் சிறையில் கலகம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.