ஆசிய நாடொன்றில் சிறையிலிருந்து தப்பிய ஐவர் சுட்டுக்கொலை
தஜிகிஸ்தானில் உள்ள சிறையில் கைதிகள் தாக்கிக்கொண்டபோது தப்பிச்செல்ல முயன்ற 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சிறையில் வன்முறை
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் தலைநகர் துஷான்பேயில் உள்ள சிறையில், சில கைதிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் அது வன்முறையாக மாறிய நிலையில், அதனைப் பயன்படுத்தி சில கைதிகள் தப்பிச் செல்ல முயன்றனர்.
இதனை கவனித்த பொலிஸ் அதிகாரிகள் தடுக்க முயன்றபோது, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்கள் தாக்கியுள்ளனர்.
ஐந்து பேர் உயிரிழப்பு
இதனையடுத்து காவலர்கள் அவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் குறைந்தது 3 சிறைக் காவலர்கள் படுகாயமடைந்ததாகவும், சிறை நிர்வாகத் தலைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இரண்டாவது வட்டாரம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |