புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி! மல்யுத்த வீரர், வீராங்கனைகளை குண்டுக்கட்டாக தூக்கியதால் பரபரப்பு
இந்திய தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர்கள், புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மல்யுத்த வீரர்களின் போராட்டம்
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க எம்.பியுமான பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா இன்று நடைபெறுவதையொட்டி, மல்யுத்த வீரர்கள் நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி அமைதி பேரணி மேற்கொண்டனர்.
PTI
PTI
டெல்லியில் பரபரப்பு
அப்போது நாடாளுமன்ற கட்டடம் உள்ளிட்ட டெல்லியின் முக்கிய பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த பொலிஸார், பேரணியில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகளை இடைமறித்து குண்டுக்கட்டாக வாகனத்தில் ஏற்றினர்.
பொலிஸார் செயலுக்கு வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறைபிடிக்கப்பட்டவர்களில் முன்னணி வீரர்களான வினேஷ் போகாத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா ஆகியோர் அடங்குவர்.
PTI
பிரியங்கா காந்தி கடும் கண்டனம்
இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்வீட் செய்துள்ளார். அதில், 'மல்யுத்த வீரர்களின் குரல் மிதிக்கப்படுகிறது. அவர்களின் மார்பில் இருக்கும் பதக்கங்களால், நம் நாட்டிற்கு பெருமை. அந்த பதக்கங்களால், விளையாட்டு வீரர்களின் கடின உழைப்பால், நாட்டின் கவுரவம் அதிகரிக்கிறது.
பா.ஜ.க அரசின் ஆணவம் அதிகமாகிவிட்டதால், நமது பெண் வீராங்கனைகள் குரலை அரசாங்கம் இரக்கமில்லாமல் மிதித்து வருகிறது. இது முற்றிலும் தவறு. அரசின் இந்த அநீதியையும் நாடு முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறது' என கூறியுள்ளார்.
खिलाड़ियों की छाती पर लगे मेडल हमारे देश की शान होते हैं। उन मेडलों से, खिलाड़ियों की मेहनत से देश का मान बढ़ता है।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 28, 2023
भाजपा सरकार का अहंकार इतना बढ़ गया है कि सरकार हमारी महिला खिलाड़ियों की आवाजों को निर्ममता के साथ बूटों तले रौंद रही है।
ये एकदम गलत है। पूरा देश सरकार के… pic.twitter.com/xjreCELXRN
IANS, File Photo