கைப்பற்றிவிட்டோம்! ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் முக்கிய அறிவிப்பு
உக்ரைனின் முக்கிய நகரத்தை கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் அறிவித்துள்ளனர்.
டொனஸ்க் மக்கள் குடியரசைச் சேர்ந்த ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் கிழக்கு உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான லைமனை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளனர்.
உக்ரேனிய மற்றும் ரஷ்ய படைகள் டான்பாஸ் பிராந்திய நகரத்திற்காக பல நாட்களாக சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன.
லைமன் நகரம், முக்கிய ரயில்வே தளமாக திகழ்கிறது. இந்நிலையில், ரஷ்ய ஆதரவு டொனஸ்க் மக்கள் குடியரசு பிரிவினைவாதிகள் இப்போது முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறினர்.
தப்பிப்பது மிகவும் ஆபத்தானது! உக்ரேனியர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை
இதனிடையே, உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் ஆலோசகரான Oleksiy Arestovych, சூசகமாக லைமனின் வீழ்ச்சியை உறுதிப்படுத்தினார்.
மேலும் ரஷ்யா அதன் திட்டங்களை மேம்படுத்துவதை அங்கு இடம்பெற்று வரும் போர் காட்டுகிறது என்று அவர் கூறினார்.