ராணுவ குடியிருப்பின்மீது பறந்த மர்ம ட்ரோனால் பரபரப்பு
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள மீரட்டில் அமைந்துள்ள ராணுவக் குடியிருப்பின்மீது மர்ம ட்ரோன் ஒன்று பறந்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
மர்ம ட்ரோனால் பரபரப்பு
பல்வேறு பயனுள்ள விடயங்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன்கள், இன்று உலக நாடுகள் பலவற்றில் அச்சத்தையூட்டும் விடயங்களாகவும் ஆயுதங்களாகவும் மாறியுள்ளன.

ஆக, இன்று ஒரு இடத்தில், அதுவும், முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தில் ஏதேனும் ட்ரோன் தென்பட்டாலே பெரும் பரபரப்பு உருவாகிவிடுவதை மறுப்பதற்கும் இல்லை, வெறும் ட்ரோன்தானே என தவிர்ப்பதற்கும் இல்லை.
இந்நிலையில், மே மாதம் 30ஆம் திகதி மாலை, மீரட்டிலுள்ள ராணுவக் குடியிருப்பின் மீது, கமெராக்கள் பொருத்தப்பட்ட ட்ரோன் ஒன்று பறந்ததால் பரபரப்பு உருவாகியுள்ளது.
உடனடியாக, உள்ளூர் பொலிசாரும் ராணுவத்தினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கியதுடன், மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவலும் கொடுத்துள்ளனர்.
பொலிசாரும் ராணுவத்தினரும் சிறப்பு குழுக்களுடன் இணைந்து பரபரப்பை உருவாக்கிய ட்ரோன் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |