பேரழிவை சந்தித்த இலங்கை - மீண்டும் புயல் வருமா? பேராசிரியர் விளக்கம்
இலங்கைக்கு மீண்டும் புயல் வர வாய்ப்புள்ளதா என்பது குறித்து பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா பேசியுள்ளார்.
திட்வா புயலால் பேரழிவை சந்தித்த இலங்கை
வங்க கடலில் உருவான திட்வா புயலால், இலங்கையில் கடுமையான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 390 பேர் உயிரிழந்துள்ளனர், 352 பேர் காணாமல் போயுள்ளனர்.
இலங்கை ராணுவம் மீட்பு நவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் நிவாரண பொருட்களை அனுப்பியதோடு, மீட்பு பணிகளிலும் உதவி வருகிறது.

இந்நிலையில், யாழ்ப்பான பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா (Nagamuthu Piratheeparajah) திட்வா புயலால் இலங்கை ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பல்வேறு விடயங்களை பகிர்ந்துள்ளார்.
"2004 ஆம் ஆண்டு சுனாமிக்கு அடுத்ததாக இலங்கை வரலாற்றில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய இயற்கை பேரிடர். இதற்கு முந்தைய புயல்கள் இலங்கையின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே பாதித்தது. இந்த புயல் மட்டுமே மொத்த இலங்கையையும் பாதித்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
இந்த புயலில் இலங்கையின் மத்திய மலை நாட்டுபகுதிகள் மற்றும் தெற்கு பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டதற்கான புவியியல் காரணம் என்ன? இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த பாதிப்பு இருக்கும்? அடுத்த புயல் எப்போது வரும்? என பல்வேறு விடயங்கள் குறித்து பேசியுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |