வீடு முழுவதும் பாம்புகள் இருப்பதை அறியாமல் அங்கு தங்கிய சிறுமி! தெரியவந்த பகீர் உண்மை
இந்தியாவில் வீட்டை சுற்றி பாம்புகள் இருப்பதை அறியாமல் இருந்த 5 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார்.
பீகாரை சேர்ந்த 5 வயது சிறுமி முழுவதும் கட்டிமுடிக்கப்படாத கைவிடப்பட்ட வீட்டில் இருந்தார். அப்போது அவரை விஷப்பாம்பு ஒன்று தீண்டியது. இதையடுத்து குடும்பத்தார் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து கிராம மக்கள் பாம்பு பிடிக்கும் நபரை அழைத்து வந்தனர். அவர் சிறுமி இருந்த வீட்டில் பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அங்கு 40 கொடிய விஷம் கொண்ட பாம்புகள் இருப்பதை கண்டுபிடித்தார்.
பின்னர் பாம்புகள் பிடிக்கப்பட்டு சாக்குமூட்டையில் போடப்பட்டு காட்டுப்பகுதியில் விடப்பட்டுள்ளன. வீட்டை சுற்றி பாம்புகள் இருப்பதை உணராமல் சிறுமி இருந்த நிலையில் உயிரிழந்திருக்கிறார்.
AHPHOTOSWPG/GETTY