பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் 25வது வெற்றி! எம்பாப்பே அசத்தல் கோல்
லீக் 1 தொடரில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ட்ரோஎஸ் அணியை வீழ்த்தியது.
எம்பாப்பே அபார கோல்
பிரான்சின் Stade de I'Aube மைதானத்தில் நடந்த லீக் 1 கால்பந்து போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் மற்றும் ட்ரோஎஸ் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 8வது நிமிடத்திலேயே PSG அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே அசத்தலாக கோல் அடித்தார். அதற்கு ட்ரோஎஸ் அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால் முதல் பாதியில் PSG 1-0 என முன்னிலை வகித்தது.
Image: GettyImages
அதன் பின்னர் இரண்டாம் பாதியில் PSG அணியின் விடின்ஹா 59வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் 25வது வெற்றி
அதனைத் தொடர்ந்து ட்ரோஎஸ் வீரர் சேவியர் சேவலெரின் 83வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதற்கு அடுத்த 3 நிமிடங்களிலேயே PSG அணிக்கு மற்றொரு கோல் பாபியன் ரூய்ஸ் மூலம் கிடைத்தது.
Warren Zaïre-Emery : « On voulait revenir avec un autre visage »#???????? | ?-?
— Paris Saint-Germain (@PSG_inside) May 7, 2023
இறுதியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ட்ரோஎஸ் அணியை வீழ்த்தியது. இது லீக் 1 தொடரில் PSG அணிக்கு 25வது வெற்றி ஆகும்.
Image: REUTERS/Johanna Geron