2026ஆம் ஆண்டில் உலக தலைவர் ஒருவர் மறைவார்... ஆவிகளுடன் பேசும் பெண் கணிப்பு
2026ஆம் ஆண்டில், பிரபலமான உலகத் தலைவர் ஒருவர் மரணமடைவார் என ஆவிகளுடன் பேசும் பெண்ணொருவர் கணித்துள்ளார்.
ஆவிகளுடன் பேசும் பெண் கணிப்பு
செலினா அவலோன் (Selina Avalon) என்னும் ஆவிகளுடன் பேசுபவரும், ஜோதிடக்கலைஞருமான பெண், 2026ஆம் ஆண்டைக் குறித்து சில்லிடவைக்கும் விடயம் ஒன்றை கணித்துள்ளார்.

அதாவது, 2025 டிசம்பர் மாதம், 21, 29 அல்லது 2026 ஜனவரி மாதத்தின் முதல் பகுதியில், ஒரு பிரபல உலகத் தலைவரின் இறுதிச்சடங்கு நடப்பதை தான் கண்டதாக தெரிவித்துள்ளார் செலினா.
அந்த தலைவர், கிரீஸ் நாட்டுடன் தொடர்புடையவர் என்றும், ஆண் என்றும், அவரது இறுதிச்சடங்கு உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவரது மரணத்தைத் தொடர்ந்து அரசு முறைப்படி அவருக்கு மரியாதை செலுத்தப்படுவதை தான் கண்டதாக தெரிவிக்கும் செலின், அவர் ஒரு ஜனாதிபதி அல்லது முன்னாள் ஜனாதிபதி, அல்லது ஒரு மன்னராக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

என்றாலும், அது ட்ரம்ப் அல்ல என்று கூறியுள்ள செலினா, ஏனென்றால், அந்த இறுதிச்சடங்கில் ட்ரம்ப் தன் மனைவியான மெலானியாவுடன் பங்கேற்றதையும் தான் கண்டதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |