மணலில் புதைந்த கிராமம்: ஆட்சியாளருக்கு வானொலி நிகழ்ச்சியில் பொதுமக்கள் கோரிக்கை

United Arab Emirates
By Ragavan Jul 06, 2023 07:06 PM GMT
Report

ஆட்சியாளர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி ஒவ்வொரு வாரமும் ஷார்ஜா வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களிடம் நேரடியாகப் பேசுவார்.

வானொலி நிகழ்ச்சியில் பொதுமக்கள் கோரிக்கை

அவ்வாறு புதன்கிழமை வானொலி நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியாளர், சார்ஜாவின் மடம் அருகே நாங்கள் வாழ்ந்த குறைபா கிராமத்தை ஒரு குடிமகன் மீட்டெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மணல் புயலால் கிராமம் புதையுண்டதாகத் தெரிகிறது. அதனை மீட்டெடுத்தால் மீண்டும் அந்தப் பகுதியில் எங்களின் வாழ்க்கையைத் தொடர உதவியாக இருக்கும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Ghost Village, Al Madam, Sharjah Village, Buried VillageJames Kerwin

இந்த கோரிக்கையை தொடர்ந்து, புதையுண்ட கிராமத்தை சீரமைக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இந்நிலையில், இதையடுத்து கிராம பகுதியில் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷார்ஜாவின் புதைக்கப்பட்ட கிராம்:

1,30,000 ஆண்டுகளுக்கு முன்பே ஷார்ஜாவில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை தொல்பொருள் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இத்தகைய பழம்பெரும் பகுதியில் ஆச்சரியங்களும் மர்மங்களும் இருப்பது இயற்கையே. துபாயிலிருந்து 60 கிமீ தொலைவிலும், ஷார்ஜாவிலிருந்து 50 கிமீ தொலைவிலும் அல் மடம் என்ற பாலைவனப் பகுதி உள்ளது. குராபா கிராமம் இங்கிருந்து தென்மேற்குப் பகுதியில் சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது.

Ghost Village, Al Madam, Sharjah Village, Buried VillageFredods/Shutterstock

ஒரு காலத்தில் அழகிய கிராமமாக இருந்த இப்பகுதியில் மனித நடமாட்டம் இல்லை என்பது மர்மமாக உள்ளது. ஏனெனில் தற்போது இந்த கிராமம் முழுவதும் மணலில் புதைந்து கிடக்கிறது. மணலில் புதைந்த கட்டிடங்களின் மேற்கூரைகள் மட்டுமே தெரியும்.

கடந்த 1970 மற்றும் 1980-களில், இந்த கிராமத்தின் கட்டிடங்கள் அரசாங்கத்தால் வீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டன. ஆனால் அடுத்த 10 ஆண்டுகள் மட்டுமே கிராம மக்களின் வாழ்க்கை அமைதியாக இருந்தது. இதையடுத்து அந்த பகுதியில் தொடர்ந்து மணல் புயல் வீச தொடங்கியது.

Ghost Village, Al Madam, Sharjah Village, Buried Villageexpatpanda

அப்போது மணல் புயல் வீடுகள் மற்றும் கட்டிடங்களை வெள்ளம் போல் தாக்கியது. இதனால் கிராமம் முழுவதும் மணலில் புதையுண்டது.

கிராம மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து ஊரை காலி செய்தனர். இன்று அப்பகுதிக்கு சென்றால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மணலில் மூழ்கியிருப்பதை காணலாம். மேலும் அங்கு வசித்த மக்கள் விட்டுச் சென்ற பொருட்களும் சேதமடைந்துள்ளன.

தற்போது இந்த பகுதி சுற்றுலா தலமாக மாறியுள்ளது. பகலில் இப்பகுதிக்கு வாகனத்தில் செல்பவர்கள் இரவில் செல்வதில்லை.

மர்மங்கள் நிறைந்த கிராமமாக இருந்த இப்பகுதி, தற்போது ஆட்சியரின் உத்தரவால் புதுப்பொலிவு பெறவுள்ளது.


Ghost Village, Al Madam, Sharjah Village, Buried Village

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US