Post office: மாதம் ரூ.5,000 முதலீடு.., 15 ஆண்டுகளில் எவ்வளவு பணம் கிடைக்கும்?
பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களின் முதல் தேர்வாக வருங்கால வைப்பு நிதி(PPF) திட்டம் உள்ளது.
மத்திய அரசின் ஆதரவுடன் இயங்கும் இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கால அவகாசம் 15 ஆண்டுகள் ஆகும். மேலும், முதலீடு, வட்டி மற்றும் முதிர்வு தொகை அனைத்திற்கும் வரி விலக்கு கிடைக்கிறது.
ஒருவர் மாதம் ரூ.5,000 வீதம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.60,000 சேமிக்கப்படும். இதன்படி 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.9 லட்சமாகும்.
தற்போதைய வட்டி விகிதப்படி கணக்கிட்டால், 15 ஆண்டுகள் முடிவில் சுமார் ரூ.16 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
அந்தவகையில், 9 லட்சம் ரூபாய் முதலீட்டிற்குவட்டி வருமானம் சுமார் 7 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்.
மேலும், வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கும் பெறலாம்.

நீண்ட காலத்திற்கு தொடர்ந்து முதலீடு செய்தால், கூட்டு வட்டியின் மூலம் தொகை வேகமாக அதிகரிக்கும்.
அதேபோல், மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.30 லட்சத்திற்கும் மேல் சேமிக்க முடியும்.
இந்நிலையில், எதிர்காலத்திற்காக பெரிய தொகையை சேமிக்க விரும்புபவர்களுக்கு இந்த திட்டம் ஒரு நல்ல முதலீட்டு திட்டமாக இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |