விஜய் ஹஸாரே: 183 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் இமாலய வெற்றி
விஜய் ஹஸாரே தொடரின் 3வது காலிறுதிப் போட்டியில், பஞ்சாப் அணி 183 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது.
பிரப்சிம்ரன் சிங் 88 ஓட்டங்கள்
மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான விஜய் ஹஸாரே 3வது காலிறுதிப் போட்டி பெங்களூருவில் நடந்தது.
Into the Semifinals! 💛💙
— Punjab Cricket Association (@pcacricket) January 13, 2026
A commanding all-round performance as Punjab thump Madhya Pradesh by 183 runs to seal their place in the Vijay Hazare Trophy semifinals.
Dominance from start to finish. 🔥🏏#PunjabCricket #PCA #VijayHazareTrophy #PUNvMP
pic.twitter.com/uz9qiEXArI
முதலில் ஆடிய பஞ்சாப் அணி 345 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் பிரப்சிம்ரன் சிங் 88 (86) ஓட்டங்களும், அன்மோல்ப்ரீத் சிங் 70 (62) ஓட்டங்களும் விளாசினர்.
அதிரடியில் மிரட்டிய நேஹால் வதேரா 38 பந்துகளில் 56 ஓட்டங்கள் குவித்தார். த்ரிபுரேஷ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இமாலய வெற்றி
பின்னர் களமிறங்கிய மத்திய பிரதேசம் எதிரணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சுருண்டது.
அந்த அணி 31.2 ஓவர்களில் 162 ஓட்டங்களே எடுக்க, பஞ்சாப் அணி 183 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ரஜத் படிதார் 38 ஓட்டங்களும், த்ரிபுரேஷ் சிங் 31 ஓட்டங்களும் எடுத்தனர். சன்விர் சிங் 3 விக்கெட்டுகளும், க்ரிஷ், ரமன்தீப் மற்றும் குர்நூர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
pcacricket/X
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |