மும்பையை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி: புள்ளிப்பட்டியலில் முதலிடம்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
ஐபிஎல் 2025 தொடரின் 69 வது லீக் ஆட்டத்தில், சவாய் மான்சிங் மைதானத்தில் நடந்த விறுவிறுப்பான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
பேட்டிங்கில் அசத்திய சூர்யகுமார் யாதவ்
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்னிங்ஸ் ரியான் ரிக்கல்டன் (27 ஓட்டங்கள்) மற்றும் ரோஹித் சர்மா (24 ஓட்டங்கள்) ஆகியோரின் சிறப்பான தொடக்கத்துடன் அமைந்தது.
ஆனால், அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 39 பந்துகளில் 57 ஓட்டங்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
வில் ஜாக்ஸ் (17) மற்றும் ஹர்திக் பாண்டியா (26) ஆகியோரின் பங்களிப்புடன் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது 20 ஓவர்கள் முடிவில் 184 ஓட்டங்கள் எடுத்தது.
பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி
185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில், தொடக்க ஆட்டக்காரர் பிரியன்ஷ் ஆர்யா 35 பந்துகளில் அதிரடியாக 62 ஓட்டங்கள் விளாசி அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார்.
பின்னர் வந்த ஜோஷ் இங்லிஸ் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டு, 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 73 ஓட்டங்கள் குவித்து மிரட்டினார்.
ஷ்ரேயஸ் ஐயர் (26) மற்றும் நேஹல் வதேரா (2) ஆகியோர் வெற்றிக்கான ஃபினிஷிங் டச்சைக் கொடுக்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மும்பை இந்தியன்ஸை தோற்கடித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |