6 ரூபாய் லொட்டரியில் ரூ.1 கோடி வென்ற இந்திய கூலி தொழிலாளி
லொட்டரியில் அதிர்ஷ்டத்தை நம்பி பலரும் பணத்தை இழந்தாலும், ஒரு சிலரின் வாழ்க்கை லொட்டரி மூலம் தலைகீழாக மாறிவிடுகிறது.
6 ரூபாய் லொட்டரியில் ரூ.1 கோடி
அதேபோல், பஞ்சாபை சேர்ந்த கூலி தொழிலாளியின் வாழ்க்கை லொட்டரியால் மாறியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், மோகா மாவட்டத்தில் வசித்து வருபவர் ஜஸ்மாயில் சிங். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது.
செங்கல் சூளையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த இவர், நேற்று அத்தியாவசிய வேலையாக ஃபெரோஸ்பூரில் உள்ள ஜிராவுக்கு சென்ற போது, 6 ரூபாய்க்கு லொட்டரி வாங்கியுள்ளார்.
சில மணி நேரத்தில் அவருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதில், அவர் 1கோடி ரூபாய் பரிசு வென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.25 லட்ச கடன்
இது குறித்து பேசிய அவர், "இதை என்னாலேயே நம்ப முடியவில்லை. மதியம் 1 மணிக்குதான், உண்மையிலேயே லாட்டரி ஜெயித்தேன் என தெரிந்து கொண்டேன்.
இந்த பணத்தின் மூலம், என்னுடைய ரூ.25 லட்ச கடனை அடைக்க உள்ளேன். மீதமுள்ள பணத்தை எனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக செலவிடுவேன்" என தெரிவித்துள்ளார்.
லொட்டரி வென்ற செய்தியை கேட்ட ஜஸ்மாயிலின் குடும்பத்தினர், இதனை பாட்டுப்பாடி, நடனமாடி கொண்டாடினர். மேலும், கிலோக்கணக்கில் லட்டு வாங்கி அந்த பகுதி மக்களுக்கு விநியோகித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |