மரண தீவில் புடினின் 5000 துருப்புகள்! பட்டினியால் மடிவதாக அதிர வைக்கும் உக்ரைன்
ஆயிரக்கணக்கான புடினின் துருப்புகள் தீவுகளில் சிக்கி இறந்து கொண்டிருப்பதாக உக்ரைன் கூறியுள்ளது.
ஆபத்தான போர்க்களம்
2022ஆம் ஆண்டு நவம்பரில் உக்ரேனியப் படைகள் தெற்கு நகரத்தை விடுத்ததில் இருந்து, நதி ஒரு புதிய முன் வரிசையை உருவாக்கியுள்ளது.
அதன் வலது கரையானது உக்ரைனால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் தாழ்வான, வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய இடது கரையானது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளது.
அந்த பகுதியானது ஆபத்தான போர்க்களங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இதற்கு காரணம் இடைவிடாத ட்ரோன் விமானங்கள், பிரங்கி மோதல்கள் மற்றும் இரவு நேரத் தாக்குதல்கள் என்று கூறப்படுகிறது.
5,100 ரஷ்யர்கள்
இந்த நிலையில், ஜனவரி முதல் டெல்டாவில் 5,100 ரஷ்யர்கள் இறந்துள்ளதாக உக்ரேனிய உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால் வீரர்கள் பட்டினியால் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரேனிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு மையத்தின் பகுப்பாய்வுத் துறைத் தலைவர் கூறுகையில்,
"டினிப்ரோ டெல்டாவில் உள்ள தீவுகளில் மீதமுள்ள ரஷ்ய இராணுவப் பிரிவுகள் உணவு, வெடிமருந்துகள் மற்றும் சுழற்சிகளில் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்கின்றன" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |