புடின் ஏற்கனவே உயிரிழந்திருக்கலாம்: ஆதாரங்களைக் காட்டும் உக்ரைன் உளவுத்துறைத் தலைவர்
ரஷ்ய ஜனாதிபதி புடின் ஏற்கனவே உயிரிழந்திருக்கலாம், அல்லது, மிகவும் மோசமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார் உக்ரைன் உளவுத்துறைத் தலைவர்.
கடைசியாக 2022ஆம் ஆண்டு தோன்றிய புடின்
ரஷ்யாவுக்கெதிரான ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் மாறுவேட ஆபரேஷன்களுக்கு பொறுப்பானவரான Major General Kyrylo Budanov என்னும் உக்ரைன் உளவுத்துறைத் தலைவர், கடைசியாக நாமெல்லோரும் நமக்கு நன்கு தெரிந்த புடினை 2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 26ஆம் திகதி பார்த்தோம்.
Credit: East2West
அதற்குப் பிறகு அவர் என்ன ஆனார், அவர் உயிருடன் இருக்கிறாரா, அல்லது மோசமான உடல் நிலையில் உள்ளாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
சுட்டிக்காட்டும் ஆதாரம்
சமீபத்தில் வெளியான வீடியோ ஆதாரம் ஒன்றை சுட்டிக் காட்டுகிறார் Budanov. அந்த வீடியோவில், புடின் மணி பார்ப்பதற்காக தனது இடது கையில் கைக்கடிகாரத்தைத் தேடுவதைக் காணலாம்.
இடது கையில் கடிகாரத்தைக் காணாமல் அவர் குழப்பமடைவதை அந்த வீடியோவில் காணலாம்.
வீடியோவை காண
விடயம் என்னவென்றால், புடின் வலது கையில் கைக்கடிகாரம் கட்டும் பழக்கம் உடையவர். அப்படியிருக்கும்போது, வீடியோவில் தோன்றும் புடின் இடது கையில் கடிகாரத்தைத் தேடுவதால், அது புடினே அல்ல, அது அவருடைய டூப் என்கிறார் Budanov.
Credit: Getty
அத்துடன், ஒவ்வொரு முறை தொலைக்காட்சியில் தோன்றும் போதும், அவரது முகத்தின் பல மாற்றங்கள் காணப்படுவதால் உண்மையாகவே தொலைக்காட்சியில் தோன்றுவது புடின் அல்ல, அவரது டூப் என்ற கருத்து பரவிவருகிறது.
Credit: East2West
Credit: East2West
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |