ஒரே மேடையில் புடினுடன் சீனாவின் ஜி ஜின்பிங்... ஓராண்டில் உலகப்போர் வெடிக்கும் என நிபுணர்கள்
இரண்டாம் உலகப்போரில் நாஜி ஜேர்மனியை வென்றதன் 80வது ஆண்டைக் கொண்டாடும் ரஷ்யாவில் ஜனாதிபதி புடினுடன் ஒரே மேடையில் சீனாவின் ஜி ஜின்பிங் பங்கேற்றுள்ளார்.
ஒரு போர்க்களமாக மாற்றும்
ரஷ்யா முன்னெடுக்கும் 80வது ஆண்டு வெற்றிவிழாவில் சீனத்து ஜின்பிங் உட்பட 29 நாடுகளின் ஜனாதிபதி மற்றும் பிரதமர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
நேற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் புதிய ஏவுகணைத் தடுப்பு அமைப்பு தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்து ரஷ்யாவும் சீனாவும் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று இரு நாடுகளின் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து இராணுவ அணிவகுப்பை கண்டு களித்துள்ளனர்.
ஏவுகணை தடுப்பு அமைப்பை புதிதாக உருவாக்கும் ட்ரம்பின் முடிவில் விண்வெளியை ஒரு போர்க்களமாக மாற்றும் அபாயம் உள்ளது என விமர்சித்துள்ளனர்.
இந்த நிலையில், இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளின் பங்களிப்பை ரஷ்யா எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு பாராட்டும் என்று புடின் அறிவித்தார்.
ஆனால் நாசிசத்தை வென்ற உண்மையான வெற்றியாளர்களை அவதூறு செய்ய ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றும், நாசிசத்தைப் பின்பற்றுபவர்களின் அட்டூழியங்களுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து போராடும் என்றும் புடின் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி நவ நாஜிக்களை அழித்தொழிக்கும் சிறப்பு இராணுவ நடவடிக்கையில் பங்கேற்பாளர்களை முழு நாடும், சமூகமும், மக்களும் ஆதரிக்கின்றனர் என்று புடின் வலியுறுத்தியுள்ளார்.
29 நாடுகளின் தலைவர்கள்
சிறப்பு இராணுவ நடவடிக்கை என்று ரஷ்யா குறிப்பிடுவது, இன்றைய வெற்றிவிழா அணிவகுப்பு நினைவுகூரும் யுத்தத்திற்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்துவரும் மிகக் கொடிய உக்ரைன் போராகும்.
முந்தைய வெற்றி தின கொண்டாட்டங்களில், ரஷ்ய ஜனாதிபதியும் அவரது உள் வட்டமும் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் மாஸ்கோவின் சிவப்பு சதுக்கத்தின் வழியாக கவச வாகனங்கள், டாங்கிகள் மற்றும் அணு ஆயுதங்களுடன் அணிவகுத்துச் செல்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு 29 நாடுகளின் தலைவர்கள் திரண்டுள்ளதால், சிறப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை ரஷ்ய எல்லைப் பகுதியான பெல்கோரோட்டில் உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியான நிலையில், செஞ்சதுக்கத்தில் நிகழ்ச்சிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை.
இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தமக்கென ஒரு அணியை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஓராண்டுக்குள் ரஷ்யாவிடம் இருந்து முக்கியமான நகர்வுகளை எதிர்பார்க்கலாம் என்றும், அது உலகப் போருக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிடுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |