புடின் மற்றும் ஜெலென்ஸ்கி சமாதான பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல்: வெளியான தகவல்
சமாதான திட்டம் குறித்து விவாதிக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இருவரும் ஒப்புக் கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஓர் ஆண்டை கடந்த போர்
உக்ரைன் மற்றும் ரஷ்யா போரினால் உலகின் பல நாடுகள் வணிகம் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தானியங்களின் விலை உயர்வு மற்றும் போரின் காரணமாக உலக வர்த்தகத்தின் தாக்கம் ஆகியவற்றால் ஆப்பிரிக்க நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
Alessandra Tarantino/AP
இதனால், ஆப்பிரிக்க கண்டம் இந்தப் போரை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பது குறித்து ஆப்பிரிக்க தலைவர்கள் சமீப மாதங்களில் பேசி ஆலோசனை நடத்தி வருவதாக, தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ராமபோசா கூறியிருந்தார்.
சமாதான பேச்சுவார்த்தை
இந்த நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களின் குழுவுடன், புடின் மற்றும் ஜெலென்ஸ்கி இருவரும் ஒப்புக் கொண்டதாக தென் ஆப்பிரிக்க ஜனாதிபதியின் கூற்றுப்படி தெரிய வந்துள்ளது.
இதற்காக தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா, தனது ரஷ்ய மற்றும் உக்ரேனிய சகாக்களுடன் வார இறுதியில் தொலைபேசியில் பேசியுள்ளார் என, அவரது அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தை பணியில் ராமபோசாவுடன் ஜாம்பியா, செனகல், காங்கோ, உகண்டா மற்றும் எகிப்து நாடுகளின் தலைவர்கள் சேர திட்டமிட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
REUTERS/Esa Alexander
AP