நள்ளிரவில் ரஷ்யா நடத்திய வான் தாக்குதல்: அசராமல் சுட்டு வீழ்த்திய உக்ரைனிய ஆயுதப் படை
உக்ரைன் தலைநகர் கீவ் மீது இரவில் ரஷ்யா நடத்திய புதிய வான்வழி தாக்குதலை உக்ரைனிய ஆயுதப்படை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
ரஷ்யாவின் புதிய வான்வழி தாக்குதல்
ரஷ்ய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட தேவையான ஆயுத உதவி கோரி உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் நேரடி வருகையை அடுத்து ஜேர்மனி, இத்தாலி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் புதிய ராணுவ உதவி தொகுப்புகளை அறிவித்து வருகிறது.
⚡️Air Force: Ukraine's air defense shoots down 18 Russian missiles overnight.
— The Kyiv Independent (@KyivIndependent) May 16, 2023
Ukrainian air defense successfully shot down all of the 18 Russian missiles targeting Ukraine overnight, including six Kinzhal ballistic missiles, Valerii Zaluzhnyi, commander-in-chief of Ukraine's…
இந்நிலையில் இதனை கண்டிக்கும் விதமாக நேற்றிரவு உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.
வானிலேயே சுட்டு வீழ்த்திய உக்ரைனிய படை
இவ்வாறு உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 18 ஏவுகணைகளை உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 6 கின்சல்(Kinzhal) பாலிஸ்டிக் ஏவுகணைகளும் உள்ளடங்கும் என உக்ரைனிய ஆயுதப் படையின் தளபதி வலேரி ஜலுஷ்னி மற்றும் உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது.
ரஷ்ய படைகள் நடத்திய இந்த வான்வழி தாக்குதலில், தலைநகர் கீவ்வில் மூன்று பொதுமக்கள் வரை காயமடைந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.