புடின் கோபத்துடன் கேட்ட கேள்வி! நெஞ்சை பிடித்து கொண்டு கீழே சரிந்த ரஷ்ய ராணுவ அமைச்சர்... புதிய பகீர் தகவல்கள்
உக்ரைனின் பெரிய நகரங்களை ஏன் கைப்பற்ற முடியவில்லை என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜெய் ஷிகோவிடம் புடின் கேட்டு கோபப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி போர் தாக்குதலை தொடங்கியது. உக்ரைன் போரில் இதுவரை ரஷ்யா மிக மோசமான அளவில் பின்னடைவுகளை சந்தித்துள்ளது. பெரிய நகரங்கள் எதையும் முழு கட்டுப்பாட்டுக்குள் ரஷ்யாவால் கொண்டு வரமுடியவில்லை.
இந்த போரில் கிட்டத்தட்ட ரஷ்யா முதல்கட்ட தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருப்பதாகவே மேற்கு உலக நாடுகள் தெரிவித்துள்ளன.
இந்த சூழலில் தான் சமீபத்தில் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜெய் ஷிகோ கடந்த ஒரு மாதமாகவே வெளியே தென்படவில்லை. பொது இடங்களுக்கு அவர் வரவில்லை. இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் கடுமையான மாரடைப்பு வந்ததாக தெரியவந்தது.
அதன்படி அவர் சட்டென நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஷிகோவுக்கு இயற்கையான முறையில் மாரடைப்பு ஏற்படவில்லை எனவும், செயற்கையான காரணங்களால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த செயற்கை காரணம் என்ன என்று தெளிவாக குறிப்பிடப்படவில்லை. முன்னதாக ஷிகோ மீது அதிபர் புடின் கோபத்தில் இருந்ததாகவும், போரில் பின்னடைவு அடைந்தது பற்றி இவரிடம் விளக்கம் கேட்டதாகவும் கூறப்பட்டது.
அதாவது ஏன் உக்ரைனின் பெரிய நகரங்களை கைப்பற்ற முடியவில்லை என்று கேட்டுள்ளார். அதோடு அங்கு போருக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பல்வேறு ஜெனரல்கள் திருடிவிட்டதாகவும் கூறப்பட்டது. இவர்கள் மீது புடின் கோபமாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தான் ஷிகோவுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.