இஸ்ரேலிடம் மன்னிப்பு கேட்ட புடின்!
ஹிட்லர் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறிய கருத்திற்கு இஸ்ரேலிடம் புடின் மன்னிப்பு கோரியுதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இத்தாலிய தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ‘ஹிட்லர் யூத ரத்தம்’ என கூறினார்.
செர்ஜி லாவ்ரோவ் கருத்துக்கு இஸ்ரேல் கடும் கண்டும் தெரிவித்தது. மேலும், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியது.
புடினின் விருப்பம் இதுதான்... வெளிப்படையாக கூறிய ரஷ்யாவின் நட்பு நாட்டின் ஜனாதிபதி
இந்நிலையில், தன்னுடன் தொலைபேசியில் உரையாடிய புடின், லாவ்ரோவ் கருத்துக்கு மன்னிப்பு கேட்டதாகவும், அதை தான் ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்துள்ளார்.
யூத மக்கள் மற்றும் ஹோலோகாஸ்ட் நினைவகம் பற்றிய தனது மரியாதையை தெளிவுபடுத்தியதற்காக புடினுக்கு நன்றி தெரிவித்தாக பென்னட் கூறினார்.