பதவி விலகிய 2 நாளில் பாதுகாப்பு அமைச்சக அதிகாரியாக நியமித்த புடின்: யார் அவர்?
வடக்கு ரஷ்யாவின் முன்னாள் தலைவரை, பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியாகப் பணியாற்ற புடின் நியமித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
விளாடிமிர் உய்பா
கோமி குடியரசின் தலைவராக செயல்பட்டு வந்தவர் விளாடிமிர் உய்பா (Vladimir Uyba). இவர் செவ்வாய்க்கிழமை அன்று பதவி விலகுவதாக அறிவித்தார்.
வருடாந்திர மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, இந்த வாரம் ராஜினாமா செய்யும் மூன்றாவது பிராந்திய நிர்வாகி உய்பா ஆவார்.
முன்னதாக, கோவிட்-19 பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளில் ரஷ்யாவின் பெடரல் மருத்துவ பயாலஜிக்கல் ஏஜென்சிக்கு உய்பா தலைமை தாங்கினார். இது ஒரு தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பாகும்.
பாதுகாப்பு அமைச்சகம்
இந்த நிலையில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியாகப் பணியாற்ற விளாடிமிர் உய்பாவை, ஜனாதிபதி புடின் நியமித்துள்ளதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தனது புதிய பதவியில் உய்பா, முக்கிய ராணுவ மருத்துவ இயக்குனரகத்தின் தலைவரான டிமிட்ரி ட்ரிஷ்கின், ரஷ்ய துருப்புக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதிலும், மருத்துவ உபகரணங்களை வழங்குவதை மேற்பார்வையிடுவதிலும் உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |