உலகை இக்கட்டான நிலைக்கு... ஐரோப்பா மீது பழிபோட்ட புடின்: ஜெலென்ஸ்கிக்கு பதில்
உலகை குழப்பத்தில் ஆழ்த்த ஐரோப்பா முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள புடின், நேருக்கு நேர் சந்திப்பதற்கான வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பையும் புறக்கணித்துள்ளார்.
ஐரோப்பிய மேட்டுக்குடி
ஐரோப்பிய ஒன்றியத்தை தொலைநோக்குப் பார்வையற்றது என்று முத்திரை குத்தியதோடு மத்திய கிழக்கில் நடைபெறும் போர் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட உலகளாவிய எரிபொருள் நெருக்கடி ஆகியவற்றையும் கடுமையாக விமர்சித்தார்.

போரை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவர நேருக்கு நேர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து, உக்ரைன் ஜனாதிபதி வியாழக்கிழமை புடினுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ள நிலையிலேயே, ரஷ்ய ஜனாதிபதியின் இந்த விமர்சனம் வெளிவந்துள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய புடின், ஐரோப்பிய மேட்டுக்குடியினர் குழப்பத்தைத் தூண்டி, மேலும் மேலும் பல நாடுகளை இந்தக் குழப்பத்தில் தள்ள முயற்சிக்கின்றனர்.
எரிபொருள் சந்தைகள் சந்தித்து வரும் பெரும் மாற்றங்களையும், குறிப்பாக இந்த நேரத்தில் மத்திய கிழக்கு போன்ற சில பிராந்தியங்களில் பதட்டங்கள் எவ்வாறு தூண்டப்படுகின்றன என்பதையும் நாம் காண்கிறோம் என குறிப்பிட்டுள்ள புடின்,
ஐரோப்பிய அதிகார வர்க்கத்தின் தொலைநோக்கற்றக் கொள்கைகள், ஆக்ரோஷமான சொல்லாடல்களுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.

நாம் சந்திக்கலாம்
இதனிடையே, உக்ரைன் ஜனாதிபதிக்கு பதிலளித்த புடின், உக்ரேனியத் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை. உக்ரேனிய தரப்பு நமது ஆயுதப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுப்பது மட்டுமே சரியானதாக இருக்கும் என்றார்.
ரஷ்யா எப்போதும் ஒப்பந்தங்களின் மீது நம்பிக்கை வைத்து செயல்படும் நாடு என குறிப்பிட்டுள்ள அவர், நிபுணர்கள் தரப்பு பணியாற்றட்டும், சில தீர்வுகளை உருவாக்கட்டும்; அதன்பிறகு நேருக்கு நேர் நாம் சந்திக்கலாம் என்றார்.

எந்தவொரு சமாதான முன்னெடுப்பிற்குமான தனது நிபந்தனைகளை முன்வைத்த புடின், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு மத்தியஸ்தராக நிராகரித்து, அதற்குப் பதிலாகத் தாம் நம்பக்கூடிய ஒருவராக சர்ச்சைக்குரிய முன்னாள் ஐரோப்பியத் தலைவர் ஒருவரைச் சுட்டிக்காட்டினார். ஆனால் புடினின் கோரிக்கையை ஐரோப்பிய நாடுகள் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |