ஈரானிய கச்சா எண்ணெய்... இந்தியப் பெருங்கடலில் கப்பலைக் கைப்பற்றிய அமெரிக்கப் படைகள்
இந்தியப் பெருங்கடலில், ஈரானிய கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற, ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கப் படைகள்
குறித்த கப்பலானது ஏற்கனவே அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கட்டளை மையம் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.
Overnight, U.S. forces carried out a maritime interdiction and right-of-visit boarding of the sanctioned stateless vessel MT DAVINA located in the Indian Ocean within the INDOPACOM area of responsibility.
— U.S. Indo-Pacific Command (@INDOPACOM) June 5, 2026
We will continue global maritime enforcement to disrupt illicit networks… pic.twitter.com/7sNPNx0doN
இந்தியப் பெருங்கடலில், தடைகளுக்கு உட்பட்டதும் எந்த நாட்டையும் சாராததுமான 'எம்டி டாவினா' (MT DAVINA) என்ற கப்பலை, அமெரிக்கப் படைகள் இடைமறித்து, ஆய்வு செய்வதற்கான உரிமையின் அடிப்படையில் அதில் ஏறிச் சோதனையிட்டன.
மேலும், சட்டவிரோதக் கட்டமைப்புகளை முறியடிக்கவும், ஈரானுக்குப் பொருள்சார் உதவிகளை வழங்கும் கப்பல்களை அவை எங்கு இயங்கினாலும் தடுத்து நிறுத்தவும், உலகளாவிய கடல்சார் அமலாக்க நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
ஈரான் துறைமுகங்கள் மீது
ஈரானிலிருந்து சீனாவிற்கு எண்ணெயைக் கொண்டு சென்றதாகக் கூறி, 'டாவினா' (Davina) கப்பல் மீது 2024-ல் அமெரிக்க நிதியமைச்சகம் தடைகளை விதித்தது.
பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய போருக்குப் பிறகு, வளைகுடாப் பகுதியையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குசரத்தை ஈரான் படைகள் கட்டுப்படுத்தி வருகிறது.

இதற்கு பதிலடியாக, ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்காவும் முற்றுகை அறிவித்தது. அத்துடன், ஏராளமான கப்பல்களை வேறு திசைக்குத் திருப்புவதும், கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்த ஆறு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தவும் செய்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |