இரண்டு பிராந்திய ஆளுநர்களை மாற்றிய புடின்
உக்ரைனின் பதிலடித் தாக்குதல்களைத் தொடர்ந்து விளாடிமிர் புடின் இரண்டு பிராந்திய ஆளுநர்களை மாற்றியுள்ளார்.
ஆளுநர்கள்
உக்ரைனை ஒட்டியுள்ள இரண்டு ரஷ்ய பிராந்தியங்கள் பிரையன்ஸ்க், பெல்கோரோட். இந்த பிராந்தியங்களை அலெக்ஸாண்டர் போகோமாஸ், வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் ஆகிய இரண்டு ஆளுநர்கள் வழி நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், உக்ரைனின் பதிலடித் தாக்குதல்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்த இந்த பிராந்தியங்களின் ஆளுநர்களை ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) மாற்றியுள்ளார்.
2022 முதல் உக்ரைனில் போரிட்டு வரும் ரஷ்ய இராணுவ ஜெனரலான அலெக்ஸாண்டர் ஷுவாயேவை, பெல்கோரோட்டின் இடைக்காலத் தலைவராக நியமித்துள்ளார்.
மாற்றிய புடின்
அதேபோல், கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு அதிகாரிகளுக்காக முன்பு பணியாற்றிய ஒரு அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெல்கோரோட் பிராந்தியத்தை 2021 முதல் வழிநடத்தி வந்த கிளாட்கோவ், தாக்குதல்களை தினமும் ஆவணப்படுத்தி வந்தார்.
அப்பகுதியில் அவருக்கு இருந்த செல்வாக்கினை ரஷ்ய ஊடங்கங்கள் செய்தியாக வெளியிட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |