புதிய வகை ஆயுதம் ஒன்றை உருவாக்கும் ரஷ்யா... ஜனாதிபதி புடின் சூசகம்
அமெரிக்கா தானாக முன்வந்து முக்கிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை என்றால், அது ரஷ்யாவிற்கு அதானல் பாதிப்பில்லை என விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
புதிய வகை ஆயுதம்
ரஷ்யா தற்போது புதிய வகை ஆயுதம் ஒன்றை உருவாக்கி வருவதாக குறிப்பிட்ட நிலையிலேயே, புடின் அமெரிக்காவை விமர்சித்துள்ளார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆயுதக் கட்டுப்பாட்டு கட்டமைப்பில் உடன்படவில்லை என்றால் அது அவமானம் என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஆயுதப் போட்டி நடந்து வருவதாக கூறிய புடின், புதிய START ஒப்பந்தத்தின் கீழ் ரஷ்யா தானாக முன்வந்து அணு ஆயுத வரம்புகளை நீட்டிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரியில் இந்த ஒப்பந்தம் காலாவதியாகியிருந்த நிலையில், இந்த திட்டத்திற்கு அமெரிக்கா இன்னும் முறையாக ஒப்புக்கொள்ளவில்லை. இதனிடையே, ரஷ்யா புதிய தலைமுறை அணு ஆயுதங்களை தொடர்ந்து உருவாக்கி சோதித்து வருவதாக புடின் குறிப்பிட்டுள்ளார்.
அணு ஆயுத சோதனை
மேலும், ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக, பெயர் குறிப்பிடாமல், பிற நாடுகள் அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளக்கூடும் என்ற சாத்தியக்கூறு குறித்து புடின் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூற்றாண்டில் வட கொரியா மட்டுமே அணு ஆயுத சோதனை செய்துள்ளது. அப்படியான சூழல் உருவானால் ரஷ்யாவும் அணு ஆயுத சோதனையை நடத்தும் என்று புடின் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |