ரஷ்யாவில் பொதுமக்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட விளாடிமிர் புடினின் நகல்: வைரல் வீடியோ
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் போல் தோற்றம் கொண்ட நபர் ஒருவர் பொதுமக்கள் கூட்டத்தில் தோன்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
உக்ரைன் ரஷ்யா இடையே நீடிக்கும் பதற்றம்
உக்ரைனின் டான்பாஸ் பகுதி ரஷ்யாவுக்கு சொந்தமானது என தெரிவித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது அதிகாரப்பூர்வ போர் தாக்குதலை அறிவித்தார்.
இந்த போர் நடவடிக்கையானது 16 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உலக அளவில் கடும் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது.
A man who looks like #Putin came out to the crowd in the center of Derbent. pic.twitter.com/k1DOB5vRpN
— NEXTA (@nexta_tv) June 28, 2023
இதனால் உலக மக்கள் அனைவரும் ரஷ்ய ஜனாதிபதி புடினின் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர்.
ஜனாதிபதி புடினின் நகல்
இந்நிலையில் ரஷ்யாவின் தெற்கு பகுதி நகரமான டெர்பென்டில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தோற்றம் கொண்ட நபர் ஒருவர் பொது மக்கள் கூட்டத்தின் இடையே தோன்றி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
Getty
மேலும் ரஷ்ய ஜனாதிபதி புடினின் போல் தோற்றம் கொண்ட நபர் பொதுமக்களுடன் கை குலுக்கி கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |