ரஷ்ய ராணுவ தளபதியை கடத்த திட்டமிட்ட வாக்னர் கூலிப்படை: வெளிச்சத்துக்கு வரும் பின்னணி
வாக்னர் கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் ரஷ்ய இராணுவத் தலைவர்களைக் கடத்தத் திட்டமிட்டிருந்ததாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
திட்டமிட்டிருந்த கிளர்ச்சி
அவரது சதித்திட்டத்தை பாதுகாப்புப் படையினர் முடக்கி விட்டார்கள் எனவும், இதனால் திட்டமிட்டிருந்த கிளர்ச்சியை முன்னெடுக்கும் நிலைக்கு யெவ்ஜெனி பிரிகோஜின் தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
@AFP/Reuters
வாக்னர் கூலிப்படையின் தலைவன் தொடக்கத்தில் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் இராணுவத் தலைவர் வலேரி ஜெராசிமோவ் ஆகியோரை தெற்கில் திட்டமிட்ட பயணத்தின் போது கடத்த திட்டமிட்டுள்ளார்.
ஆனால், இவரது திட்டத்தை இரு தினங்களுக்கு முன்னரே ரஷ்ய நிர்வாகம் உறுதி செய்த நிலையில், பதிலுக்கு Rostov நகரை கைப்பற்றியது வாக்னர் கூலிப்படை. முக்கியான ராணுவ தலைமையிடமான Rostov நகரை வாக்னர் கூலிப்படை கைப்பற்றியதன் பின்னணியில் மூத்த ராணுவ அதிகாரிகளின் உதவி இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.
@epa
அமெரிக்க உளவுத்துறையும்
இந்த நிலையில் தான் தளபதி Armageddon என அறியப்படும் Sergei Surovikin வாக்னர் கூலிப்படைக்கு உதவியிருக்கலாம் என்ற தகவல் கசிந்துள்ளது.
உக்ரைனில் முக்கிய உள்கட்டமைப்புகளை சேதப்படுத்த தவறியதை காரணமாக குறிப்பிட்டு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இராணுவத் தலைவர் ஜெராசிமோவால் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார்.
@reuters
அத்துடன், வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சிக்கு Sergei Surovikin உதவியிருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறையும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் வெளியான தகவல்கள் அனைத்தும் வெறும் கட்டுக்கதைகள் தான் என ரஷ்ய நிர்வாகம் மறுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |