உயிர் பயம்... மாஸ்கோ வான்வெளியை மூடிய விளாடிமிர் புடின்
படுகொலை முயற்சி குறித்த அச்சங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாஸ்கோ வான்வெளியை அனைத்து தனியார் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி விளாடிமிர் புடின்.
உக்ரேனிய ட்ரோன்கள்
16,700 அடி உயரம் வரையில் மாஸ்கோ வான்வெளி மூடப்பட்டுள்ளது. மூடப்பட்ட வான்வெளிக்காக ஒதுக்கப்பட்ட பகுதியானது, பிரித்தானியாவின் பரப்பளவை விட ஏறக்குறைய நான்கு மடங்கு பெரியதாகும்.

அதாவது, மேற்கில் பெலாரஸ் எல்லையிலிருந்து, வடக்கே செயின்ட் பீட்டர்ஸ்பர்க் விமான மண்டலம் வரையிலும், கிழக்கே யூரல் மலைகள் வரையிலும் மத்திய ரஷ்யாவின் மிகப்பெரிய நிலப்பரப்பில் பரவியுள்ளது.
மேலும், இது தெற்கில் போர் மண்டலத்திற்கு அருகில் ஏற்கனவே கட்டுப்பாடுகள் உள்ள ஒரு பகுதியுடன் இணைகிறது, அங்கு கடந்த நான்கு ஆண்டுகளாக விமானங்கள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, நீண்ட தூரம் செல்லக்கூடிய உக்ரேனிய ட்ரோன்கள் மாஸ்கோவைத் தாக்கும் திறன் கொண்டவை என்பது குறித்த அச்சங்கள் அதிகரித்து வரும் சூழலிலும் இந்த வான்வெளி மூடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி புடினின் போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவுகளின்படி, விமானிகளுக்கு விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, படுகொலை முயற்சிகளின் அபாயத்தை அகற்றுவதற்காக, மாஸ்கோ மற்றும் விளாடிமிர் புடின் வசிக்கும் இடத்திற்கு அருகே சிறிய விமானங்களின் அங்கீகரிக்கப்படாத இயக்கங்கள் தொடர்பான வழிமுறைகளை பாதுகாப்பு சேவைகள் பரிசீலித்து வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
புடின் நடவடிக்கை
மாஸ்கோவைச் சுற்றியுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளும், தலைநகரின் மேற்கே புடினின் நோவோ-ஒகாரியோவோ அரண்மனைக்கு அருகிலுள்ள உயர்மட்ட குடியிருப்புப் பகுதியும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
தனியார் விமானப் பயணத் திட்டங்களைத் தொடர்ந்து சரிபார்க்காமல், தாழ்வான மட்டத்தில் பறக்கும் திட்டமிடப்படாத விமானங்களைச் சந்தேகத்திற்குரியவையாகக் கருத இது இராணுவத்திற்கு வழிவகுக்கும்.

மாஸ்கோவில் அனைத்து விமானப் பயிற்சிப் பள்ளிகளும் விமானிப் பயிற்சியும் தடை செய்யப்படும், ஆனால் செல்வாக்கு மிக்க பெரும் பணக்காரர்களின் தனியார் விமானங்கள் தொடர்ந்து பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, கீவ் மீதான வான்வழித் தாக்குதல்கள் தொடர்வதற்கு முன்னதாக, ரஷ்ய வான்வெளியின் பெரும் பகுதியை மூடுவதற்கு புடின் நடவடிக்கை எடுத்துள்ளார்.
உக்ரைனின் பதிலடி நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுவதால், இந்த விமானப் பயணத் தடை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |