ஸ்டாலின் நிலைமை தான் இப்போது புடினுக்கு! சித்தப்பிரமை பிடித்துள்ளதாக முன்னாள் கேஜிபி முகவர் தகவல்
ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தற்போதையை நிலையை ரஷ்யாவின் முன்னாள் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் கடைசி கால நிலைமையுடன் ஒப்பிட்டுள்ளார் முன்னாள் கேஜிபி முகவர்.
புடின் டிமென்ஷியா நோயின் ஆரம்ப கட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், இப்போது அவர் மிகவும் சித்தப்பிரமையாக இருக்கிறார் என்றும், இதனை முன்னாள் தலைவர் ஜோசப் ஸ்டாலினுடன் ஒப்பிடலாம் என்று முன்னாள் கேஜிபி முகவர் போரிஸ் கார்பிச்கோவ் கூறியுள்ளார்.
உக்ரைனுக்கு ரஷ்யாவுக்கு இடையே 2 மாதங்களுக்கு மேலாக போர் நடந்துவரும் நிலையில், புடினின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், அவரது உண்மையான உடல்நிலை பற்றிய தகவல்களை புடினின் உள் வட்ட உறுப்பினர்கள் மூடி மறைத்துவருவதாகவும் அவர் கூறினார்.
4 பெண்களுடன் உறவில் இருந்த புடின்! வெளியான காதலிகள் பட்டியல்..
புடின் பைத்தியக்காரத்தனமாக நடந்துகொள்வதாகவும், அவர் மிகவும் சந்தேகத்திற்குரியவர், சித்தப்பிரமையால் ஆட்கொள்ளப்படுகிறார் என்றும், அவரை இப்போது தனது கடைசி ஆண்டுகளில் சித்தப்பிரமையில் வாழ்ந்த கொடுங்கோலாளர் ஸ்டாலினுடன் ஒப்பிடலாம் என்றும் அவர் கூறினார்.
புடினுக்கு ரகசியமாக 2 மகன்கள்! பிரசவம் பார்த்த மருத்துவர் அதிர்ச்சி தகவல்
பாம்பு தீவில் ரஷ்ய ரோந்து கப்பல்களை அழித்த உக்ரைன்! வெளியான வீடியோ ஆதாரம்
"ரஷ்ய பாதுகாப்பு சேவைகளில் உள்ளவர்கள் மற்றும் அவரது நெருங்கிய உள் வட்டத்திற்குள் உள்ளவர்கள் உட்பட அனைவரையும் புடின் துரோகிகளாக பார்க்கிறார்" என்று அவர் கூறினார்.
ஜனாதிபதி விளாடிமிர் புடின் பார்கின்சன் மற்றும் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் நம்புகிறார்.