பாம்பு தீவில் ரஷ்ய ரோந்து கப்பல்களை அழித்த உக்ரைன்! வெளியான வீடியோ ஆதாரம்
கருங்கடல் பகுதியில் உள்ள பாம்பு தீவில் இருந்த ரஷ்ய ரோந்து கப்பல்களை உக்ரைனிய ஆளில்லா விமானம் அழித்த சாட்டிலைட் வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது.
பாம்பு தீவுக்கு அருகே திங்கள்கிழமை காலை உக்ரேனிய பைரக்டர் ஆளில்லா விமானத்தால் இரண்டு ரஷ்ய ராப்டார் ரோந்துப் படகுகள் அழிக்கப்பட்டதாக உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருங்கடலில் உள்ள தீவு அருகே ராப்டார் ரோந்து படகுகளில் ஒன்றை குறிவைத்து ட்ரோன் தாக்கிய வீடியோவை உக்ரைனிய பாதுகாப்பது அமைச்சகம் வெளியிட்டது.
Bayraktar TB-2 என்பது துருக்கியில் வடிவமைக்கப்பட்ட ஆயுதமேந்திய ட்ரோன் ஆகும், இது ரஷ்ய இலக்குகளுக்கு எதிராக உக்ரேனிய ஆயுதப் படைகளால் பயன்படுத்தப்பட்டது.
இந்த தாக்குதலை மாஸ்கோ இன்னும் உறுதிப்படுத்தவோ அல்லது எதிர்வினையாற்றவோ இல்லை.


