பேச்சுவார்த்தைக்கு பிறகும் உக்ரைன் போரை ரஷ்யா தொடர்ந்தால்…டிரம்ப் கடும் எச்சரிக்கை!
போர் நிறுத்தத்தை புடின் மீறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான கிட்டத்தட்ட 3 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது.
இந்த போர் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இதுவரை எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவிற்கு கூடுதல் அழுத்தம் வழங்கி வருகிறார்.
அந்த வகையில், நாளை அலஸ்காவில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
உலகின் இரு பெரும் தலைவர்களுக்கு இடையிலான இந்த சந்திப்பு நிச்சயம் போரை முடிவுக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போரை தொடர்ந்தால் கடுமையான விளைவு
இதற்கிடையில், பேச்சுவார்த்தைக்கு பிறகு உக்ரைன் போரை ரஷ்யா தொடர்ந்தால் ரஷ்யா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுடன் உரையாடல்
புடினுடனான பேச்சுவார்த்தை தொடர்பாக ஐரோப்பிய தலைவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது அமெரிக்கா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக டிரம்ப் தெரிவித்ததாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |