தென் அமெரிக்க நாடொன்றில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு
தென் அமெரிக்காவில் இதுவரை ஆய்வு செய்யப்படாத இடத்தில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Founders Metals நிறுவனம் தேர்ந் அமெரிக்காவின் Suriname நாட்டில், Maria Geralda என்ற இடத்தில் மிக உயர்தர தங்க சுரங்கத்தை கண்டுபிடித்துள்ளது.
Maria Geralda பகுதியில் 22.5 மீற்றர் நீளத்தில் 11.88 கிராம்/டன் அளவிலான தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது High-Grade தங்கமாக கருதப்படுகிறது.
இந்த இடம் Lower Antino முகாமிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கடந்த பருவ ஆய்வில் 0.1g/t தங்கம் கொண்ட மாதிரிகள் அதிகமாக இருந்ததால், இப்போது இந்த அளவுகள் ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்த பகுதி intrusion-hosted மற்றும் shear-hosted அமைப்புகள் இணையும் Greenstone Belt பகுதியில் உள்ளது.
இங்கு Fault Lines மற்றும் rigid intrusions காரணமாக தங்கம் கொண்ட Quartz பாகங்கள் உருவாகியுள்ளன. மேலும், Pyrrhotite என்ற Sulfide கனிமம் மற்றும் தங்கம் கொண்ட vein swarms இங்கு காணப்படுகின்றன.
ஒரு டன்னுக்கு 12 கிராம் அளவிலான தங்கம் Open-Pit சுரங்க தொழிலுக்கு மிகவும் பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக இருக்கும். அதாவது குறைந்த அளவிலான பாறைகள் மூலம் அதிக தங்கம் பெறமுடியும்.
இந்த புதிய தங்கம் கண்டுபிடிப்பு Suriname நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Suriname Gold discovery, Founders Metals Maria Geralda, High grade Gold Mine Suriname, Suriname Gold mine, New Gold Exploration