கடும் புடின் விமர்சகர்... பிரித்தானியாவுக்கு தப்பிய ரஷ்யர்: ஹொட்டலில் சடலமாக மீட்பு
ரஷ்ய ஊடகங்களில் சமையற்கலைஞராக தோன்றியவர், உக்ரைன் போருக்கு எதிராக விளாடிமிர் புடினை பகிரங்கமாக விமர்சித்து லண்டனுக்கு தப்பியவர் ஹொட்டல் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ரஷ்யாவின் Jamie Oliver
செர்பியா தலைநகருக்கு தொழில்முறை பயணமாக சென்றவர் தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 52 வயதான Alexei Zimin மரணம் தொடர்பில் விரிவான விளக்கம் இன்னும் அளிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
ரஷ்யாவின் Jamie Oliver என கொண்டாடப்பட்டவர் Zimin. கடந்த 2022ல் உக்ரைன் மீதான போர் தொடங்கியதன் பின்னர், விளாடிமிர் புடின் அல்லது போர் தொடர்பில் விமர்சனம் முன்வைத்துள்ள பலர் இதுவரை மர்மம்மான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யா ஊடகங்களில் சமையல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்று Alexei Zimin. இவருக்கு லண்டனில் Zima என்ற உணவகமும் செயல்பட்டு வருகிறது.
உக்ரைன் போருக்கு எதிராக
உக்ரைன் பிராந்தியமான கிரிமியாவை அடாவடியாக ரஷ்யா கைப்பற்றிய நிலையில், விளாடிமிர் புடின் தொடர்பில் கடும் விமர்சனம் முன்வைத்து, இரவோடு இரவாக லண்டனுக்கு தப்பியவர்.
2022ல் இவரது தொலைக்காட்சி தொடர் ரஷ்ய அரசாங்கத்தால் ரத்து செய்த பின்னர், இதுவரை இவர் தாய்நாட்டிற்கு செல்லவில்லை. உக்ரைன் போருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் Alexei Zimin.
செர்பியாவில் தமது புதிய நூல் தொடர்பிலான கலந்துரையாடலுக்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |